Published:Updated:

முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிதியுதவி போதுமானதுதானா?

Doctors ( AP Photo )

ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகள் நல்ல நோக்கத்துடன்தான் இதுபோன்ற நிதியுதவிகளை அறிவிக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்துமிடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் இதில் குளறுபடிகளை ஏற்படுத்துகின்றனர்.

முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிதியுதவி போதுமானதுதானா?

ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகள் நல்ல நோக்கத்துடன்தான் இதுபோன்ற நிதியுதவிகளை அறிவிக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்துமிடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் இதில் குளறுபடிகளை ஏற்படுத்துகின்றனர்.

Published:Updated:
Doctors ( AP Photo )

கோவிட்-19 தொற்றின் முதல் அலையின்போது பணியாற்றி உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் பிறகு சில நாள்களிலேயே அந்தத் தொகை ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பையும் அவரே வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், அந்த 25 லட்ச ரூபாயும் உயிரிழந்த அனைத்து முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கும் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் 28 பேருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அவர்களில் ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் இருந்தனர். அதற்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. பலர் இழப்பீடு கிடைக்காமல் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த சமயத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்து மு.க.ஸ்டாலின் முன்களப் பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது அவர் முதல்வராகப் பதவியேற்றதும் முந்தைய ஆட்சி வழங்கிய ரூ.25 லட்சத்தையே அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 43 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத்தொகை போதுமானதா, அனைத்து மருத்துவர்களும் இந்த நிதியுதவி சரியாகச் சென்று சேராததற்கு என்ன காரணம் உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

Covid-19
Covid-19

புள்ளிவிவரம் இல்லை!

``முதலில் மத்திய அரசுதான் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது. காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் தமிழகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, மருத்துவப் பணியாளர்கள், செவிவியர்களும் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 பணியின்போது உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான புள்ளிவிவரம் இதுவரை இல்லை. அதைத் திரட்டுவதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் குறைக்கப்பட்டது?

அரசிடம் நிதித் தட்டுப்பாடு என்று கூறிவிட்டு தங்கள் ஆட்சியைப் பற்றி புகழ்ந்து நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்களைக் கொடுத்தனர். போர் நடக்கும்போது `அனைத்தும் போர்முனைக்கே' என்று சொல்வார்கள். போர் நடக்கும்போது அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உணவு, உடை என்று எந்தத் தட்டுப்பாடும் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டிலுள்ள அனைத்தையும் அங்குதான் அனுப்புவார்களாம். கோவிட்டுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்கள்தான் ஈடுபடுகின்றனர். பிற தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவர்களுக்குத்தானே முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்? இந்த நோக்கில் கடந்த அரசு செயல்படவில்லை.

Doctor
Doctor

காப்பீட்டு நிறுவனங்கள்

இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் அரசு கொடுக்கக் கூடாது. அந்நிறுவனங்கள் அந்த ஆவணம் வேண்டும், இந்த ஆவணம் வேண்டும் என்று மக்களை அலைக்கழிப்பார்கள். இதுவும் இழப்பீடு சரியாகச் சென்று சேராததற்கான காரணங்களில் ஒன்று. நேரடியாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

ரூ. 25 லட்சம் போதுமானதா?

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அளிக்க வேண்டும். முதற்கட்டமாகத் தற்போது ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மாநிலத்தின் நிதி நிலைமை சீரான பிறகு மீதம் ரூ.75 லட்சத்தைக் கொடுக்க வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு வருவோம் என்று தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டி நிதியைத் திரட்டுவதற்கான வழிவகையைச் செய்ய வேண்டும்.

அறிகுறி இருந்தவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்!

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்து உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்கள் மட்டுமே நிதியுதவி பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்ற வரையறை உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சரியான முறையில் சளி மாதிரி சேகரிக்கப்படாவிட்டாலும், சளி மாதிரியை முறையாகப் பராமரிக்கவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டைப் பகுதியில் இல்லாமல் நுரையீரலில் தொற்றினாலும் முடிவுகள் நெகட்டிவ் என்று வருவதற்கு வாய்ப்புள்ளது.

இவை அனைத்தும் சரியாக இருந்தாலும்கூட 70 சதவிகிதம்தான் அந்தப் பரிசோதனையின் செயல்திறன் எனும்போது மீண்டும் தவறான முடிவுகள் வர வாய்ப்புள்ளது. எனவே, கோவிட் அறிகுறிகள் ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கும் இந்த இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர், ``ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகள் நல்ல நோக்கத்துடன்தான் இதுபோன்ற நிதியுதவிகளை அறிவிக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்துமிடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள்தான் இதில் குளறுபடிகளை ஏற்படுத்துகின்றனர். கோப்புகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் அலட்சியப் போக்கு, தேவையில்லாமல் பொதுமக்களை அலைக்கழிப்பது, அரசு அறிவிப்பிலிருக்கும் சிறிய ஓட்டைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியைத் தாமதிப்பது, தடைசெய்வது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.

Covid-19
Covid-19
Pixabay

தற்போதுகூட முதல்வர் மருத்துவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். அது ஒரு மாதத்துக்கு ரூ.30,000 என மூன்று மாதங்களுக்கா அல்லது மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 30 ஆயிரமா என்ற தெளிவு இல்லை. இதுபோன்ற சாதகங்களை அரசு அதிகாரிகள் பயன்படுத்திக்கொண்டு பயனாளிகளை வதைக்கின்றனர். எனவே, நிதியுதவி, இழப்பீடு போன்ற விஷயங்களில் அரசு அதிகாரிகளைத் துரிதப்படுத்தும் வேலையையும் அரசு செய்ய வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism