Published:Updated:

`தேர்தல் பணியாற்ற பேருதவியாக இருக்கும்!’- கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கரூர் ஆட்சியர்

 தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆட்சியர் மலர்விழி
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆட்சியர் மலர்விழி ( நா.ராஜமுருகன் )

`அனைத்துத் துறைகளின் முன்களப்பணியாளர்கள் தாமாக முன்வந்து சம்மதம் தெரிவித்து, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், வரக்கூடிய தேர்தல் பணிகளில் கொரோனா அச்சமின்றி ஈடுபட பேருதவியாக இருக்கும்' - கரூர் ஆட்சியர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு, அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், வரும் தேர்தலில் அச்சமின்றி பணியாற்ற முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கரூர் மருத்துவக் கல்லூரி
கரூர் மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி செய்தியாளர்களிடம்,``முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

96 வயது மூதாட்டிக்கு குடல் இறக்க நோய் அறுவை சிகிச்சை... சாதித்த கரூர் அரசு மருத்துவமனை!

இதையொட்டி இன்று நான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன். இந்தத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட பின்னர் எந்தவிதமான உடல் உபாதைகளும் ஏற்படவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் இந்தத் தடுப்பூசி எனக்கு வலி குறைந்ததாகவே இருக்கிறது. எனவே, அனைத்துத்துறைகளின் முன்களப் பணியாளர்கள் தாமாக முன்வந்து சம்மதம் தெரிவித்து, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், வரக்கூடிய தேர்தல் பணிகளில் கொரோனா அச்சமின்றி ஈடுபடப் பேருதவியாக இருக்கும்.

ஆட்சியர் மலர்விழி
ஆட்சியர் மலர்விழி
நா.ராஜமுருகன்

நமது கரூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் 10,011 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காகக் கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை 20% அதாவது, 2,468 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழியைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனும் தடுப்பூசி போட்டு கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா, வட்டாட்சியர்கள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் எனப் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு