Published:Updated:

#Covid-19: சொட்டு மருந்து வடிவம், மூன்றாம்கட்ட பரிசோதனை... இந்திய `கோவாக்ஸின்' அப்டேட்ஸ்!

கோவிட்-19 தடுப்பூசி
News
கோவிட்-19 தடுப்பூசி

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசியான `கோவாக்ஸின்' மூன்றாவது கட்ட மனித பரிசோதனைக்குள் நுழைகிறது.

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசியான `கோவாக்ஸின்' மூன்றாவது கட்ட மனித பரிசோதனைக்குள் நுழைகிறது. ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. மனிதப் பரிசோதனைகள் நிறைவடைந்து தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதன் உற்பத்தித் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி/ vaccine
தடுப்பூசி/ vaccine

இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டாலும், அதை நாட்டின் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்ப்பது சவாலான காரியமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.எம்.ஆர்) பார்ட்னர்ஷிப் அமைத்து கோவாக்ஸின் தடுப்பூசியை உருவாக்கி வருகிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைக்குச் செல்கிறோம். இந்தத் தடுப்பூசியானது இரண்டு டோஸ் ஊசி மருந்தாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது குறைந்த அளவிலேயே தடுப்பூசிகளை உருவாக்கி பாதுகாக்கும் திறனோடு உள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டுக்குள் 100 கோடி மருந்துகளைத் தயாரித்து பாதுகாக்கும் திறனை எட்டும் என்று நம்பப்படுகிறது.

Syringe and needle
Syringe and needle

"இரண்டு டோஸ் மருந்தாக கோவாக்ஸினைத் தயாரிக்கும்போது இந்தியாவின் 130 கோடி மக்கள்தொகைக்கு அதைச் செலுத்துவதற்கு 260 கோடி ஊசிகளும் சிரிஞ்சுகளும் தேவைப்படும். தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதைப் போன்றே விநியோகத்துக்குத் தேவையான விஷயங்களை ஏற்பாடு செய்வதும் சவாலானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் சொட்டு மருந்து வடிவில் ஒரே டோஸ் மருந்தாகத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கெனவே எங்கள் நிறுவனத்துக்கு போலியோ மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்துகளை சொட்டு மருந்து வடிவில் தயாரித்த அனுபவம் உள்ளது. சொட்டு மருந்து வடிவிலான 100 கோடி தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டுக்குள் தயாரித்துவிட முடியும்" என்று தெரிவித்துள்ளார் கிருஷ்ணா எல்லா.

சொட்டு மருந்து வடிவில் 100 கோடி கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கல்லூரியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக செப்டம்பர் மாதமே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ்

அமெரிக்காவின் அடுத்த தடுப்பூசி!

அமெரிக்க நிறுவனமான ஃபைசர் (Pfizer) மற்றும் ஜெர்மானிய நிறுவனமான BioNTech ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயாரித்துள்ள தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில், அது 90 சதவிகிதத்துக்கும் மேல் செயல்திறனுடையது என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மார்டனா (Moderna) என்ற அமெரிக்க நிறுவனத்தின் mRNA-1273 என்ற தடுப்பூசியின் செயல்திறனும் 94.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஃபைசன், மார்டனா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இன்னும் சில வாரங்களில் அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) அனுமதிக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளன. அவசர அனுமதி என்ற வரையறையின் கீழ் எஃப்.டி.ஏ-வின் அனுமதியைப் பெற்று பொதுமக்களுக்குத் தடுப்பூசியை வழங்கவும் திட்டமிட்டு வருகின்றன.

எஃப்.டி.ஏ-வின் விதிப்படி, 50 சதவிகிதம் செயல்திறன் இருந்தால் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும். இந்த இரண்டு நிறுவனங்களும், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச செயல்திறனைக் காட்டிலும் பல மடங்கு முன்னிலையில் உள்ளதால், எளிதில் அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Pfizer
Pfizer

இரண்டு நிறுவனங்களும் இணைந்து அமெரிக்காவிலுள்ள 2 கோடி மக்களுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்க முடியும். முதல்கட்டமாக `ஹை ரிஸ்க்' பட்டியலிலிருக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், அவசரகால மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் சில மாதங்கள் பிடிக்கும் என்றும் இருவேறு கருத்துகள் உலவுகின்றன.

தடுப்பூசி மட்டும் போதாது!

இந்தியா, அமெரிக்கா எனத் தடுப்பூசி குறித்த சாதகமான தகவல்கள் வெளிவரும் வேளையில், உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ், தடுப்பூசி மட்டும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதாது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ``கோவிட்-19 தடுப்பூசி என்பது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் சாதனங்களுக்கு மாற்றே தவிர, தீர்வு அல்ல. தடுப்பூசி மட்டுமே பெருந்தொற்றை நீக்காது. கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

WHO டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ்
WHO டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ்

கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், க்வாரன்டீன், சிகிச்சைகள் ஆகிவற்றை இன்னும் அதிகரிக்க வேண்டும். தொற்றுள்ளவர்களிடம் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிதலைத் தீவிரப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி கண்டறிப்பட்டுவிட்டால் முதற்கட்டமாக அதன் விநியோகம் மருத்துவப் பணியாளர்கள், முதியோர், நோய் பாதிக்கும் ஆபத்து அதிகமாக இருக்கும் நபர்கள் ஆகியோருக்கு மட்டுமே இருக்க வேண்டும். இந்த வகையினருக்கு முதலில் தடுப்பூசி சென்றடையும்போது உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.