Published:Updated:

இங்கு யாவரும் நலம்!

வீரபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
வீரபாபு

அனைவரும் இயல்பாக இருக்கும் வகையில் திறந்த வெளியில் நடைப்பயிற்சி, தியானம் என அனைத்துக்கும் அனுமதி வழங்கினோம்.

“டேய், டேய்! மெதுவா அடிடா... வாக்கிங் போற தாத்தா மேல பட்டுறப் போகுது...நேத்துதானே திட்டு வாங்கி னோம்!” கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் குரலைக் கடந்து சென்றால், புங்கை, வேப்ப மரங்களின் அடியில் தியானம், மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் முதியவர்கள் சிலர். சற்று தூரத்தில் கைகால்களை வீசி வாக்கிங் சென்று கொண்டிருந்தனர் நடுத்தர வயதினர் சிலர். கோவிட்-19 பராமரிப்பு மையத்துக்குப் புறப்பட்ட நம்மை கூகுள் மேப் தவறாக வழிநடத்திவிட்டதோ என்ற சந்தேகம் எழும்பியது.

விசாரித்ததில், சென்னை சாலிகிராமத்தி லுள்ள சித்தா கோவிட்-19 பராமரிப்பு மையம்தான் என்று உறுதிசெய்து கொண்டோம். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கோவிட்-19 பரவத் தொடங்கி யதும் அலோபதி மருத்துவர்களுடன் சீனப் பாரம்பர்ய மருத்துவர்களும் கைகோத்து சிகிச்சையளித்தனர். அதன் காரணமாக ஒரு சில மாதங்களில் பாதிப்பின் தீவிரம் குறைக்கப்பட்டது என்ற செய்திகளும் வந்துகொண்டிருந்தன.

வீரபாபு
வீரபாபு

இந்தியாவுக்கு கோவிட்-19 நுழைந் ததுமே நம் நாட்டில் நடைமுறையிலுள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகளும் சிகிச்சையில் சேர்க்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முறைகளை அறிவித்தன. இந்நிலையில்தான், சென்னையில் லேசான கோவிட்-19 தொற்று ஏற்பட்ட 69 பேருக்கு சித்த மருத்துவ முறைகளை வழங்கிப் பரிசோதித்தார் சித்த மருத்துவர் வீரபாபு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு நோயாளிகள் வீடு திரும்பினர். இதனையடுத்து அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று சென்னை சாலிகிராமத்திலுள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவ கோவிட்-19 மையமாக மாற்றப்பட்டது. ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் இதுவரை 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

“ `நான் கொரோனா நோயாளி’ என்ற எண்ணமே ஒருவரை அதிகம் பாதித்து மன இறுக்கத்தை ஏற்படுத்திவிடும். மன இறுக்கம் உடல் குணமாவதிலும் எதிரொலிக்கும் என்பதால் இயல்பான சூழலை இங்கு உருவாக்கினேன். அனைவரும் இயல்பாக இருக்கும் வகையில் திறந்த வெளியில் நடைப்பயிற்சி, தியானம் என அனைத்துக்கும் அனுமதி வழங்கினோம்.

ஆரோக்கியமான மூலிகை உணவுகளே நோயாளிக்கு வழங்கப்படுகின்றன. அதுதவிர, சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், ஆடாதொடைக் கஷாயம், கற்பூரவல்லிக் கஷாயம், சித்த மருத்துவ மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குக் காய்ச்சல் இருந்தால் பாராசிட்டமால் மாத்திரையையும் உடன் எடுக்கச் சொல்கிறோம்.இங்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தியளிக்கவே படுக்கைகளின் எண்ணிக்கையை 250-லிருந்து 425 ஆக அரசு உயர்த்தியுள்ளது” என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சித்தா பராமரிப்பு மையங்களில் லேசான பாதிப்புள்ளவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். தீவிர பாதிப்புள்ளவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கருத்து இருக்கிறதே?’ என்ற கேள்வியை எழுப்பினோம். “அரசு தரப்பிலிருந்து லேசான, மிதான, தீவிரமான பாதிப்புள்ளவர்கள் என்று பிரித்து இங்கு நோயாளிகளை அனுப்புவதில்லை. நோய் உறுதி செய்யப்பட்டவுடன், தாங்களாகவே கிளம்பி இங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள்தாம் அதிகம். அதில் நாங்கள் தரம் பிரித்துச் சிகிச்சையளிப்பது இல்லை.

இங்கு யாவரும் நலம்!

மருத்துவமனைக்கு வரும்போதே ஆக்ஸிஜன் அல்லது வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கிறேன். மற்றபடி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்கவே முடியாமல் அனுமதிக்கப்பட்ட வர்களெல்லாம் குணமடைந்து திரும்பியிருக்கின்றனர்” எனும் சித்த மருத்துவர், மறக்க முடியாத அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் தொற்று கண்டறியப் பட்டது. உடனே மருத்துவனையிலிருந்து ஆம்புலன்ஸில் கிளம்பி இங்கு வந்துவிட்டனர். தாய், குழந்தை இருவருக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். பிறந்து இரண்டே நாள் ஆன குழந்தைக்கு எப்படிச் சிகிச்சையளிப்பது என்று சிறிய தயக்கம் இருந்தது. சித்த மருத்துவத்தை நம்பி வந்துவிட்டனர். அவர்களைக் கைவிட்டுவிடக்கூடாது என்று பராமரிப்பு மையத்தில் அனுமதித்துவிட்டேன்.

தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பினர். 2 நாள் குழந்தை முதல் 91 வயது முதியவர் வரையிலும் இங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீண்டு சென்றாலும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது” பரபரப்பு தொற்றிக்கொள்ள விடைபெற்றார் வீரபாபு.

கோவிட்-19 தொற்றைக் கையாள்வதில் சித்தமருத்துவம் நேர்மறை விமர்சனங் களைப்பெற்றுள்ளதையடுத்து,

டுத்ததாக வியாசர்பாடியிலுள்ள அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரியையும் சித்த மருத்துவப் பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளது அரசு. தமிழக அரசு, தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து மையத்தை நடத்தி வருகின்றன. பாதிப்பு அதிகமாக இருக்கும் வடசென்னையில் இந்தப் பராமரிப்பு மையம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மையத்தின் ஒருங்கிணைப் பாளர் சித்த மருத்துவர் ராமமூர்த்தியிடம் பேசினோம். ``கோவிட்-19 பாதிப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சையைத் தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மையத்தில் 230 படுக்கைகள் உள்ளன. இன்னும் சித்த மருத்துவப் பராமரிப்பு மையங்களை அதிகரிக்க இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இங்கு யாவரும் நலம்!

சித்த மருத்துவர்கள் 6 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 6 பேர் என மொத்தம் 12 பேர் இங்கு மூன்று ஷிஃப்டுகளில் பணியாற்றுகின்றனர். அலோபதி மருத்துவர்களும் நோயாளிகளின் நிலையை தினமும் பரிசோதிப்பார்கள். அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருந்துகளைக் கொடுப்பார்கள்.

பெரும்பாலும் சித்த மருத்துவம், யோகப் பயிற்சிகள், மூலிகை உணவுகள் ஆகியவைதான் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. கோவிட்-19 தொற்றோடு அதிக மூச்சுத்திணறலோடு வந்த ஒரு நபர் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். விடைபெறும்போது, ‘ஓரடிகூட எடுத்து வைக்க முடியாம வந்தேன். இப்போ எங்க வீட்டு பப்பியைவிட வேகமாக என்னால ஓட முடியும். இங்குள்ள சிகிச்சை என்னை மட்டுமல்ல என் நம்பிக்கையும் மீட்டெடுத்துள்ளது’ என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றார்” சந்தோஷம் பகிர்ந்தார் ராமமூர்த்தி.

நோய் குணமாவதற்கு மருந்து, மாத்திரை களைவிட நல்ல மனநிலை, இயல்பான சூழல், ஆரோக்கியமான உணவு ஆகிய மூன்றும் அத்தியாவசியம் என்பதை உணர்த்துகின்றன சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையங்கள்.

உங்களால் மட்டும் எப்படி?

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு உடைகள் அணிந்தே சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் சித்த மருத்துவர் வீரபாபு எவ்வித பாதுகாப்பு உடையுமின்றி சிகிச்சையளித்து வருவது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடமே கேட்டோம். ``பத்து ரூபாய் மாஸ்க்கைத் தவிர நான் வேறு எதையும் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவது கிடையாது. நோயாளிகளைப் பார்க்கப் போவதற்கு முன்பும் பின்பும் சோப் போட்டு வெந்நீரில் கைகளை நன்றாகக் கழுவிவிடுவேன். தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகளைத் தொட்டு, கைகளைப் பிடித்துப் பார்த்துதான் சிகிச்சையும் அளிக்கிறேன். எந்தச் சிறப்பான முன்னெச்சரிக்கை விஷயங்களையும் எடுத்துக் கொள்வதில்லை.

15 வருடங்களாகவே மூலிகை உணவை மட்டும்தான் சாப்பிடுகிறேன். வாரத்துக்கு ஒருநாள் அசைவம்.நோயாளிகள் மத்தியில் சிகிச்சையளித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பசி தீயாக இருக்கும். வைரஸுக்கு எதிராக உடல் போராடுவதால் ஏற்படும் களைப்பு அது. அதனால் முன்பைவிட இப்போது அதிகமாக ஒரு மடங்கு சாப்பிடுகிறேன். தினமும் இரண்டு முட்டை தவறாமல் எடுத்துக்கொள்கிறேன்.

கொரோனா சமயத்தில் எல்லாருக்கும் பரிந்துரைக்கும் மூலிகைத் தேநீர், கபசுரக் குடிநீர் ஆகியவை மட்டுமே தடுப்புக்காகச் சாப்பிடுகிறேன். நான் மட்டுமல்ல, எனக்கு உதவியாக சித்தா பராமரிப்பு மையத்தில் 15 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களும் எவ்விதப் பாதுகாப்பு உடைகளையும் அணிவதில்லை. இதே தடுப்பு மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களும் நலமுடன்தான் இருக்கிறார்கள் எனும்போது சித்த மருத்துவத்தின் மகத்துவம் என்றுதானே சொல்ல வேண்டும்.

கோவிட்-19-க்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்த நான்கைந்து நாள்கள் குடும்பத்தினரை நினைத்து சிறிய பயமும் பதற்றமும் இருந்தது. சிகிச்சையளித்துவிட்டு வீட்டுக்குப் போவதால் எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு அந்த பயம் மாறிவிட்டது.

இப்போது வழக்கம்போல் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குத்தான் செல்கிறேன். இரவுப் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டுதான் தூங்கச் செல்கிறேன்.நான் நம்பும் சித்த மருத்துவம் என்னை எப்போதும் கைவிடாது என்ற நம்பிக்கையிருக்கிறது” தன்னம்பிக்கையுடன் விடைபெற்றார் வீரபாபு.