Published:Updated:

முதலமைச்சரின் நிவாரண நிதி... குவியும் நன்கொடைகள்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பிரபலங்கள், பெருநிறுவனங்கள் தொடங்கி எளிய மனிதர்கள், குழந்தைகள்வரை ஏராளமானோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பங்களித்துவருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொருளாதார ரீதியில் அரசுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்ளக்கூடிய செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரபலங்கள், பெருநிறுவனங்கள் தொடங்கி எளிய மனிதர்கள், குழந்தைகள்வரை ஏராளமானோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பங்களித்துவருகின்றனர்.

எஸ்.சி.எம் குழுமம்

என். கே. நந்தகோபால்
என். கே. நந்தகோபால்

இந்தப் பின்னணியில், தி சென்னை சில்க்ஸ், ஶ்ரீ குமரன் தங்க மாளிகை, எஸ்.சி.எம். குழுமம் சார்பாக, அதன் மேலாண்மை இயக்குநர் என். கே. நந்தகோபால், கடந்த 15-ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

எக்கி பம்ப்ஸ் & வீஸ்மன்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட, சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமான வீஸ்மன் குழுமம் (Viessmann Group), காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கிவருகிறது. இது இந்தியாவில் பம்புகள் மற்றும் நீர் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கிவரும் பெருநிறுவனமான எக்கி-யுடன் (EKKI) இணைந்து இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

கனிஷ்கா ஆறுமுகம்
கனிஷ்கா ஆறுமுகம்

எக்கி பம்ப்ஸ் நிறுவனத்தின் துணை-தலைமைச் செயல் அதிகாரியான கனிஷ்கா ஆறுமுகம், வீஸ்மன் மற்றும் ஹோமா பம்ப்ஸ் நிறுவனங்களின் சார்பிலும், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து ரூ. 1 கோடி மதிப்பிலான வெண்டிலேட்டர்கள் மற்றும் பிபிஇ கருவிகளைக் கொரோனா மீட்புப் பணிகளுக்காக வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு