Published:Updated:

மதுரை: `அடக்கவிலையைவிட மிகவும் குறைவு!' - அசத்தும் நோய் எதிர்ப்பு மருந்துப் பெட்டகம்

மாநகராட்சி வழங்கும் மருந்துப் பெட்டகம்
மாநகராட்சி வழங்கும் மருந்துப் பெட்டகம்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் அடங்கிய மருந்துப் பெட்டகம், மதுரை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், கடந்த மாதம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளைக் கொண்ட மருந்துப் பெட்டகம்.

ரூ,100-க்கு விற்கப்படும் இந்த மருந்துப்பெட்டகம், மதுரை மக்களிடையே தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலை குறைவாக இருப்பதால், வெளி ஊர்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் வாங்கி பார்சல் அனுப்பி வருகிறார்கள் மதுரை மக்கள்.

மருந்துப் பெட்டகத்தை வாங்கிச் செல்லும் நபர்
மருந்துப் பெட்டகத்தை வாங்கிச் செல்லும் நபர்

நம்மிடையே பேசிய கீழவாசலைச் சேர்ந்த மணி, ``என்னுடைய நண்பர் மூலம்தான் இந்த மருந்துப் பெட்டகம் விற்கப்படுவது தெரிந்தது. உடனே மாநகராட்சி அலுவலகம் வந்து வாங்கினேன். அதன் உள்ளே, கபசுரக் குடிநீர் சூரணம் (பொடி) - 50 கிராம், ஆடாதொடை மணப்பாகு - 100 மில்லி பாட்டில், தாளிசாதி சூரணம் 40 மாத்திரைகள், 10 சத்துமாத்திரைகள், 10 ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் 30 - சிறிய டப்பா ஆகியவை இருந்தன.

கொரோனா : 4,000-த்தைக் கடந்த பாதிப்பு! - அச்சத்தில் மதுரை மக்கள்

இதைத் தனித்தனியாக வாங்கினால், 250 ரூபாய் முதல் 300 வரை செலவாகும். ஆனால், இங்கே 100 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.

மருந்துப் பெட்டகம் விற்பனை
மருந்துப் பெட்டகம் விற்பனை
மதுரை: தேர்தல் வேலையால் பகை; மிரட்டல்! பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

இதை எனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டேன். திருநெல்வேலி, ஈரோடு மட்டுமல்லாமல், பெங்களூரு, மும்பைப் பகுதிகளில் உள்ள எனது உறவினர்கள், எங்களுக்கும் வேண்டும் எனக் கேட்டார்கள். அதனால், அனைவருக்கும் சேர்த்து 10 மருந்துப் பெட்டகம் வாங்கியிருக்கிறேன். அவர்களுக்கு பார்சல் போட்டுவிட்டுதான் வீட்டுக்குச் செல்வேன்” என்றார் புன்னகையோடு.

மருந்துப் பெட்டகத்தில் உள்ள மருந்துகள்.
மருந்துப் பெட்டகத்தில் உள்ள மருந்துகள்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ”அடக்கவிலையைவிட மிகக் குறைவான விலையில் மருந்துப் பெட்டகம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஒரு நாளைக்கு 3,000 மருந்துப் பெட்டகம் இங்கே விற்கப்படுகிறது. ரெட் கிராஸ் மூலம், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும்விட, மாநகராட்சிப் பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு இந்த மருந்துப் பெட்டகத்தை இலவசமாகக் கொடுக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு