Published:Updated:

`மெனோபாஸ்...பெண்களுக்கெனத் தனிக்கொள்கை!' -அமைச்சரின் பேச்சுக்குக் குவியும் ஆதரவு

மெனோபாஸ்
மெனோபாஸ் ( Menopause )

அந்தச் சமயத்தில் பெண்களின் கர்ப்பப்பையின் செயல்பாடு மெல்ல மெல்ல குறையும். செக்ஸ் ஹார்மோன் சுரப்பும் குறையத் தொடங்கும். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாகத் தடைப்பட்டுவிடும்.

கர்ப்பகாலம் போல மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு அளிக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஆதரவு பற்றிய கொள்கைகள் அரசிடம் இல்லை என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

Minister Smriti
Minister Smriti

மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேசிய அவர், மெனோபாஸ் என்பது பெண்ணின் வயது மூப்பின் ஓர் அங்கமாக இருக்கிறது. பொதுவாக, 45 முதல் 55 வயதுடைய பெண்கள் மெனோபாஸால் ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். அந்தச் சமயத்தில் பெண்களின் கர்ப்பப்பையின் செயல்பாடு மெல்ல மெல்ல குறையும். செக்ஸ் ஹார்மோன் சுரப்பும் குறையத் தொடங்கும். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாகத் தடைப்பட்டுவிடும்.

மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த நேரத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிறிய பிரச்னைகள் முதல் தீவிர பிரச்னைகள்வரை ஏற்படும். எந்தப் பெண்ணாலும் தவிர்க்க முடியாத நிகழ்வு இது.

Menopause
Menopause
Pixabay

ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து வளரிளம் பருவம், இனப்பெருக்கக் காலம், கர்ப்ப காலம், பிரசவ காலம் என அனைத்துப் பருவங்களிலும் பெண்களைப் பராமரிக்க அரசு கொள்கை முடிவு எடுத்து திட்டங்கள் வகுத்துள்ளது.

அதே போன்று மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கும் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களின் நலன் பராமரிக்கப்பட வேண்டும்.

women
women
Pixabay

அதற்கான கொள்கைத் தயாரிப்பதற்காக ஏதேனும் முடிவெடுக்கும் முன்னர், அரசுத்துறை மற்றும் தனியார் துறை பெண்கள், பங்குதாரர்கள், நிபுணர்கள், பொதுமக்கள் என அனைவரிடம் கருத்துக் கேட்கப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார். அமைச்சரின் கருத்துகளை பல தரப்பட்ட பெண்களும் வரவேற்றுள்ளனர்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு