Published:Updated:

"ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு; விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" - மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``ஆக்சிஜனைக் கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.'' - மா.சுப்பிரமணியன்

"ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு; விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" - மா.சுப்பிரமணியன்

``ஆக்சிஜனைக் கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.'' - மா.சுப்பிரமணியன்

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடியை வந்தடைந்தார்.  விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், ”உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்துவருகிறது. தமிழகத்தில் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்துகள் கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்வர் ஆராய்ந்தார். தமிழகத்தில் ஏற்கெனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால், அவர்களைப் பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. குறிப்பாக, கோவை, மதுரை திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை அமைக்கப்பட்டிருக்கிறது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கின்றன. படுக்கைகளைப் பொறுத்தவரை கொரோனாவுக்கென்று ஏற்கெனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கின்றன. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் திறந்துவைக்கப்பட்டன. குழந்தைகளுக்கு என்றும்கூட பிரத்தியேகமாகப் படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஆக்சிஜனைக் கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.

எனவே, மக்கள் பெரிய அளவில் அச்சப்படவேண்டியதில்லை. தடுப்பூசி போடும் பணி முதல் தவணையாக 96 சதவிகிதமும், இரண்டாவது தவணையாக 92 சதவிதமும் முடிக்கப்பட்டிருக்கினன. எனவே ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதுமுள்ள மக்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாகப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், ஆங்காங்கே  ஒவ்வொரு நாளும் 40, 50 பேர் மரணமடைந்துகொண்டிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாத காலமாக உயிரிழப்பு என்பது ஏதுமில்லை.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தமிழகத்தில் 6, 7, 8 என்கிற ஒற்றை எண்ணிக்கையில்தான் பாதிப்பு நிலவிவருகிறது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, மிகப் பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது. மக்கள் அதிகமாகக் கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.