Published:Updated:

``தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவையில்லை" - சொல்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

``தமிழ்நாட்டில் ஊரடங்கு தேவையில்லை" - சொல்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தொற்று வேகமாக அதிகரித்துவருவது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களைப் பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

அப்போது, `` தமிழ்நாட்டில் 94.68 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85.74 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்கிறார்கள். கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் 10 சதவிகிதம் பேருக்கு அதிகமாகத் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, தொற்று பாதிப்பு 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு தேவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது ஐந்து சதவிகிதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறனர். அதனால், ஊரடங்குக்கான தேவை கிடையாது.

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் தடுப்பூசி காரணமாக 88 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவத்துறையில் செவிலியர்கள், மருத்துவர்கள் என்று காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்" என்று பேசினார்.