Published:Updated:

கொரோனா: அதிகக் கட்டணம்; மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

``வரும் காலங்களில் அரசின் உத்தரவினை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்புச் சிகிச்சை மையம், 300 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களையும் பார்வையிட்டார்.

corona
corona
Unsplash

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலித்த சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவமனைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டண வசூல் செய்கின்றனர். ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் இதுபோன்று அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. வரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி: அடுத்தடுத்த புகார்கள்; திடீர் ஆய்வு! - விதிகளை மீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்?

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் மற்றும் ஐ.சி.எம்.ஆர் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதுமே உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. வளர்ந்த நாடுகளே படுக்கை வசதிகளைக் கொடுப்பதற்குத் திணறி வரும் நிலையில், தமிழகத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலும் 26,58,150 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,80,000 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்காக அனைத்து மாவட்டங்களிலும், சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. ஹோமியோபதி, சித்தா உட்பட 18 மையங்களில் ஏற்கெனவே 75,000 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு