Published:Updated:

`15 அரசு மருத்துவமனைகள்; ரூ.1 கோடி நிதி!' - கொரோனா தடுப்புக்காக உதவிய செந்தில் பாலாஜி

ஒரு கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கடிதம்
News
ஒரு கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கடிதம்

தமிழக எம்.எல்.ஏ-க்களில் செந்தில் பாலாஜி மட்டும்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இவ்வளவு அதிகமான தொகையை ஒதுக்கியிருக்கிறார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 7 வட்டாரங்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறார், செந்தில் பாலாஜி.

 செந்தில் பாலாஜி பவுன்டேஷன் சார்பில் கிருமி நாசினி வழங்குதல்
செந்தில் பாலாஜி பவுன்டேஷன் சார்பில் கிருமி நாசினி வழங்குதல்

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 1600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 39 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறார் செந்தில் பாலாஜி.

அவரிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வெளியே வராமல், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா வைரஸை ஒழிக்க உதவ வேண்டும்.

இந்தக் கொரோனா வைரஸ் எமனை ஒழிக்கப் போராடும் போராட்டத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்ள, எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளேன். கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் கொடுத்துள்ளேன்.

 செந்தில் பாலாஜி ஃபவுண்டேஷன் சார்பில் கிருமி நாசினி வழங்குதல்
செந்தில் பாலாஜி ஃபவுண்டேஷன் சார்பில் கிருமி நாசினி வழங்குதல்

அதேபோல், பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சமும், க.பரமத்தி வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.7,76,000-மும் ஒதுக்கியுள்ளேன்" என்றார்.