Election bannerElection banner
Published:Updated:

மும்பை: கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்! - போலீஸார் வழக்கு பதிவு

பிறந்தநாள் கொண்டாடிய காளை
பிறந்தநாள் கொண்டாடிய காளை

போலீஸார் விரைந்து வந்தபோது யாரும் கொரொனா விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து கிரண் மாத்ரே மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மும்பை மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா முழுவதும் காட்டுத்தீ போன்று கொரோனா பரவிவருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் 50 சதவிகித அளவுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையைத் தவிர்த்து மும்பை அருகிலுள்ள அனைத்து நகரங்களிலும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாக்பூரில் 15-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயில் மூலம்தான் அதிக அளவில் கொரோனா பரவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிறந்தநாள் கேக்
பிறந்தநாள் கேக்

கடந்த சில நாள்களாக மகாராஷ்டிராவில் தினமும் 10,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. மும்பையிலும் தினமும் 1,000 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவிவருகிறது.

நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 15,817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபருக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா வேகமாகப் பரவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பை மண்டத்தில் 3,137 பேருக்கு புதிதாக கொரோனா பரவியிருக்கிறது. இதனால் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்போது மும்பை அருகிலுள்ள டோம்பிவலியில் வாலிபர் ஒருவர், தான் ஆசையாக வளர்த்துவரும் காளை மாட்டுக்கு பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாளுக்கு தனது நண்பர்கள் ஏராளமானோரை அழைத்திருந்தார்.

பிறந்தநாள் கொண்டாடிய காளை
பிறந்தநாள் கொண்டாடிய காளை

கிரண் மாத்ரே என்ற அந்த வாலிபரின் காளையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற யாரும் கொரோனா விதிகளை கடைப்பிடிக்கவில்லை. யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. அதோடு ஏராளமான அளவு பட்டாசுகள் வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். கேக்கும் வெட்டப்பட்டது. கேக்கை மாட்டுக்குக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தும் பாடினர். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பின்னர் வெளியிட்டனர். திடீரெனப் பட்டாசு வெடித்ததில் என்னவென்று பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்தபோதுதான் விஷயம் தெரியவந்தது. இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து யாரோ போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தபோது யாரும் கொரொனா விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து கிரண் மாத்ரே மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிறந்தநாள் விழாபுக்கு 100 பேருக்கும் மேல் வந்திருந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டோம்பிவலியிலும் கொரோனா காரணமாக 50% கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு