Published:Updated:

கொரோனா சிகிச்சை - 350 படுக்கைகளுடன் சென்னையில் பிரத்யேக மருத்துவமனை!

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை ( Pixabay )

350 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை நாளை முதல் செயல்படத் தொடங்கிவிடும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மதுரையில் நோய் உறுதி செய்யப்பட்ட 54 வயது ஆணுக்கு சமூகப் பரவல் மூலம் நோய் பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crorona spread
Crorona spread

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை செயல்படவுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை வாலாஜா சாலையிலுள்ள ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கடந்த ஜனவரி 23-ம் தேதிதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hospital Beds
Hospital Beds
Pixabay

மருத்துவமனையில் தயாராக வைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரும் கல்லூரி முதல்வருமான டாக்டர் நாராயண பாபுவிடம் பேசினோம்.

``350 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை நாளை முதல் செயல்படத் தொடங்கிவிடும். கொரோனா சிகிச்சைக்கான மையமாக இது விளங்கும். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. சற்று குறைவான பாதிப்புள்ளவர்களுக்கான மேலும் 50 படுக்கைகள் சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 200 படுக்கைகள் நோய் பாதித்த சந்தேகம் உள்ளவர்களை அனுமதித்து, பரிசோதித்து சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

கவச ஆடைகள்
கவச ஆடைகள்

சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், ஊழியர்களுக்கான கவச உடைகள், மருந்துகள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகள், நாள்பட்ட நோயுடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் யாரும் கொரோனா சிகிச்சைக்காக நியமிக்கப்படவில்லை.

Corona
Corona

ஆரோக்கியமானவர்களே அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அளித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். நோய்ப் பரவல் தொடங்கிய நிலையிலேயே இந்த மருத்துவமனையில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Corona Treatment
Corona Treatment
`இத்தாலியில் கியூபா டாக்டர்கள்!' - படிப்படியாகக் குறையும் கொரோனா இறப்பு விகிதம்

தற்போது கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக முழுவதுமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவமனை என்பதால் சுற்றுப்புறமும் மருத்துவமனை வளாகமும் சுகாதாரமாக இருப்பதாகவும் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செயல்பட்டு வரும் கொரோனா பிரத்யேக சிகிச்சை வார்டுகளும் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு