Election bannerElection banner
Published:Updated:

கருச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை.. பாராட்டைப் பெறும் நியூசிலாந்தின் புதுச் சட்டம்

Pregnancy
Pregnancy ( Photo by freestocks.org from Pexels )

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்ததால், உடனடியாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.

``இழப்புக்கு படிநிலைகள் கிடையாது. அது எல்லாருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் விஷயம்தான்" - உலகமே வியந்து பார்க்கும் வகையில் ஒரு சட்டத்தை அமல்படுத்திய பிறகு நியூசிலாந்து என்ற குட்டியூண்டு நாடு உலகத்துக்குச் சொல்லியிருக்கும் செய்தி இதுதான். கருச்சிதைவுக்கு ஆளாகும் பெண்களுக்கும் அவரின் கணவருக்கும் மூன்று நாள்கள் சம்பளத்துடன்கூடிய விடுமுறையை அளிக்கும் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியிருக்கிறது.

Miscarriage
Miscarriage

``கருச்சிதைவுக்குப் பிறகான துயரத்தை உடல்நலக்குறைவு என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்க முடியாது. ஒப்பிடவே முடியாத இழப்பு அது", நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்த பிறகு அந்நாட்டுப் பிரதமரின் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கின்னி ஆண்டர்சன் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், இந்த விடுமுறை, கருக்கலைப்பு செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்படாது என்று அந்நாட்டு சட்ட மேதைகள் தெரிவித்துள்ளனர்.

``இதுபோன்ற சட்டத்தை இயற்றிய நாடுகளின் வரிசையில் நாமும் முன்னணியில் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கருச்சிதைவு மற்றும் பிரசவத்துக்கு முன்பாக, பிரசவத்தின்போது குழந்தைகள் இறக்கும் நிகழ்வைச் சந்திக்கும் தம்பதியரின் வலியையும் துயரத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Newzeland
Newzeland

கருச்சிதைவைக் காட்டிலும் முழு கர்ப்பகாலமும் கடந்து பிரசவ சமயத்தில் குழந்தை இறந்துபோவதுதான் அதிக துயரத்தைக் கொடுக்கும் என்று கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இழப்புக்கு படிநிலைகள் என்பது கிடையாது. அதை அனுபவிக்கும் அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தும் விஷயம்தான்" என்று கின்னி ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

``இந்த மசோதாவின் மூலம் பெண்கள் கருச்சிதைவைப் பற்றி பேசுவதற்குத் தயங்குவது குறையும் என நம்புகிறேன். மேலும் அதுபோன்ற சமயத்தில் தேவைப்படும் உடல்நலம், மனநலம் சம்பந்தப்பட்ட உதவிகளைப் பெறுவதற்கும் தயங்காமல் முன்வருவார்கள்" என்றிருக்கிறார்.

இதற்கு முன்பு அந்நாட்டில் 20 வார கர்ப்ப காலத்துக்குக் குறைவாகக் கருச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது கருச்சிதைவு ஏற்படும் அனைத்துப் பெண்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Pregnancy
Pregnancy
Pixabay
கருச்சிதைவு, குறைப்பிரசவம்... காற்று மாசுபாடு நிகழ்த்திக் கொண்டிருக்கும் பயங்கரங்கள்!

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தலால், உடனடியாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. கர்ப்பம் தரிக்கும் பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சட்டங்களுக்கு அனைத்து நாடுகளும் சிவப்புக் கம்பளம் விரிக்கலாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு