Published:Updated:

சுகாதார கை கழுவுதலால் `ஹைஜின் ஹீரோ'வான ஊட்டி சிறுவன்!- W.H.O பாராட்டு

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

ஊட்டி அருகில் உள்ள ஒரு மலைகிராம சிறுவன் கொரோனா வைரஸ் குறித்து அறிந்துவைத்திருப்பதோடு, முறையான சுகாதார கைகழுவுதலையும் செயல் விளக்கத்தோடு செய்து காண்பித்த சம்பவம் உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போதையை தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை (Indcoserve) மேலாண்மை இயக்குநருமான சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தனது வழக்கமான பணிக்காக ஊட்டி அருகில் உள்ள இத்தலார் தேயிலை தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்.

corona awareness
corona awareness

செல்லும் வழியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் சிலர் பீட்ரூட் காய்கறிகளை கழுவிக்கொண்டிருக்க அதன் அருகில் மூன்று சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த சுப்ரியா சாஹூ, வாகனத்தை விட்டு கீழே இறங்கி, அந்த சிறுவர்களிடம், `என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?,’ என கேட்டுள்ளார். 'விடுமுறை என்பதால் விளையாடிக்கொண்டிருக்கிறோம்', என பதிலளிக்க, ’கொரோனா வைரஸ் குறித்து உங்களுக்கு தெரியுமா’ என இவர் கேட்க, அதற்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறுவர்கள் பதிலளித்துள்ளனர்.

ஊட்டி சிறுவன்
ஊட்டி சிறுவன்

அது மட்டுமல்லாது, மற்றொரு சிறுவன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முறையாக கைகழுவும் விதத்தை செயல் விளக்கமாக செய்து காண்பித்துள்ளான். இந்த வீடியோவை டிவிட்டரில் சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது உலக அளவில் டிரெண்டாகிவருகிறது.மேலும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus இந்த சிறுவனை வாழ்த்தி ரீட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சுப்ரியா சாஹூ கூறுகையில், ``தமிழகத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் வாழக்கூடிய சிறுவர்கள் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பது சாதாரண செயல் அல்ல. தமிழக அரசு- மாவட்ட நிர்வாகம்- அரசுத்துறைகள்... என கூட்டாக இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் வெற்றி இது. மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் சென்று சேர்ந்தால் அந்த குடும்பமே பாதுகாக்கப்படும்" என்றார்.

Ooty Boy
Ooty Boy

மலைக்கிராமத்து சிறுவன் ஒருவன் சுகாதாரம் குறித்த முறையான புரிதலைக் கொண்டிருப்பதோடு, சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி 100 சதவிகிதம் சரியாகக் கைகளைக் கழுவியதால் இந்த சிறுவனை ’ஹைஜின் ஹீரோ’ என பாராட்டி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு