Published:Updated:

`ஏழே நாளில் மீண்ட இருவர்!’ - நம்பிக்கையளிக்கும் நீலகிரி நிலவரம் #Corona

corona
corona

அவர்கள் இருவரையும் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். இந்த இரண்டு ஓட்டுநர்களும் 7 நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு சென்று திரும்பிய 45 லாரி ஓட்டுநர்கள் மற்றும் மற்ற மாவட்டங்களுக்குச் சென்று திரும்பிய 238 லாரி ஓட்டுநர்களுக்கு பரிசோதனை‌ செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ooty
ooty

நான்கு ஓட்டுநர்களும் கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் நஞ்சநாடு கீழ் கோழிக்கரை பகுதியைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் சகோதரிக்கும் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ooty
ooty

கோவையில் இரண்டாம் கட்டமாக 5 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``கடந்த வாரம் கோயம்பேடு சென்று திரும்பிய நால்வருக்கும், அவர்களின் உறவினர் ஒருவருக்கும் என 5 பேருக்கு புதிதாக கொரோனா உள்ளதற்கான அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டாவது பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

ooty
ooty

எனினும், அவர்கள் இருவரையும் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். இந்த இரண்டு ஓட்டுநர்களும் 7 நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு