Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர் - இரண்டாம்கட்டமாக 4,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி போட்டுக்கொண்ட  கலெக்டர்
தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இந்தப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் இதர துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முன்களப் பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வாரம் தொடங்கின. நீலகிரி மாவட்டத்தில் 4,800 பேர் பதிவு செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக அவர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்
தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்

தற்போது, இரண்டாவதுகட்டமாக வருவாய்த்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இந்தப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் இதர துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தியா: மூன்று நாளில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி! - 580 பேருக்கு எதிர்மறை விளைவுகள்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,``முதற்கட்டமாக 4,800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இரண்டாம்கட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில், நான் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட  கலெக்டர்
தடுப்பூசி போட்டுக் கொண்ட கலெக்டர்

இரண்டாம்கட்டமாக 4,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடித்தவுடன், ஏற்கெனவே முதற்கட்டமாக ஊசி போட்டுக்கொண்ட 4,800 பேருக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு