Published:Updated:

கொரோனா அச்சம்... மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்லும் நோயாளிகள்!

representational image
representational image ( Pixabay )

கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்ற நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் ஆளாகியிருக்கின்றனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த அயர்லாந்தைச் சேர்ந்த நபருக்கு காய்ச்சல் தொற்று இருப்பது விமான நிலையக் கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அம்மாநிலம் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரும் அவருடன் வந்த நபரும் அனுமதிக்கப்பட்டனர்.

Hospital
Hospital
Freepik

மருத்துவமனையில் தனி வார்டில் வந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிச் சென்றனர். கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்ற நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதே போல துபாயிலிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனைக்காக அவருடைய ரத்த மாதிரிகளை வாங்க முற்போட்டபோது, அதை அளிக்காமல் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Corona Virus
Corona Virus
Pixabay
அசைவ உணவுக்குத் தடை, அமோக விற்பனையில் சைவ முட்டை... சீனாவில் கொரோனா விளைவுகள்!

அதன் பிறகு, கொரோனா பரவுவது தொடர்பான செய்திகளை அறிந்த பிறகு, அவரே நிலையை உணர்ந்து, மருத்துவமனைக்குத் திரும்பி ரத்தப் பரிசோதனைகளைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு