Published:Updated:

கொரோனா: வார்டுதோறும் ஃபீவர் கேம்ப்; மொபைல் பரிசோதனை! - அசத்தும் தஞ்சை ஆட்சியர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்

`பரிசோதனைக்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்தினால்தான், கொரோனா தடுப்பில் வெற்றி அடைய முடியும். இதனால்தான் தனித்துவமான சில ஏற்பாடுகளை செய்துள்ளோம்' என்கிறார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அமைச்சர்களும் அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அதேசமயம், மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்களை பரிசோதித்துக்கொள்ள வாய்ப்பிருந்தால்தான், இதற்கு எளிதாக ஒத்துழைப்பார்கள். மற்ற மாவட்டங்களை ஒப்பீடும்போது, தஞ்சை மாவட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளில் சில தனித்துவங்கள் கையாளப்படுகின்றன.

மொபைல் பரிசோதனை நிலையம்
மொபைல் பரிசோதனை நிலையம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், ``கொரோனா பரிசோதனைக்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்தினால்தான், கொரோனா தடுப்பில் வெற்றி அடைய முடியும். வார்டுதோறும் ஃபீவர் கேம்ப்க்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆக்சிஜன் லெவல் 95-க்கு கீழ உள்ளவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, சிகிச்சை அளிக்கிறோம். இதுபோன்றவர்களுக்கு கொரோனா வாய்ப்பு சற்று அதிகம். கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறியும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பரிசோதனையை ஆய்வு செய்யும் ஆட்சியர் கோவிந்தராவ்
கொரோனா பரிசோதனையை ஆய்வு செய்யும் ஆட்சியர் கோவிந்தராவ்

அணைக்கரை, நீலத்தநல்லூர், விளாங்குடி சோதனைச் சாவடிகள், பெரியார் மணியம்மை தனிமைப்படுத்தும் மையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவமனை. கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், அதிராம்பட்டினம், பேராவூரணி அரசு மருத்துவமனைகள் உள்பட அனைத்து இடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தச் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தில் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடல்நலம் சரியில்லாதவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை தொடர்புகொண்டு நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கொரோனா: `அவள் இல்லாமல் எப்படி இருப்பேன்?' - இறப்பிலும் பிரியாத கணவன், மனைவி

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 60,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 267 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இயன்றவரை வீடுகளிலேயே இருக்க வேண்டும். வெளியில் வந்தால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு