ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாள்களுக்குள் குணமடைந்து விடுகிறார்கள் என ஒன்றிய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். மூன்றாவது அலையில் கோவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் குறித்து டெல்லியில் விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தத் தரவுகளின் அடிப்படையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் (சிலருக்கு நடுக்கத்தோடுகூடிய காய்ச்சல்), இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு போன்றவை பொதுவான ஐந்து அறிகுறிகளை சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
மேலும் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இந்த அறிகுறிகள் தானாக 5 நாள்களுக்குப் பிறகு, குறையும் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டதுதான், தடுப்பூசிகளால் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதிகப்படியான கோவிட் தொற்று பரவும் பத்து மாநிலங்களில் தமிழகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.