Published:Updated:

`டெல்லி சென்றவரை விசாரிக்கச் சென்ற காவலர்.. 4 வயது சிறுவன்’ - பெரம்பலூர் கொரோனா சோகம்

வி.களத்தூர் காவல் நிலையம்
வி.களத்தூர் காவல் நிலையம்

போலீஸ்காரர்களுக்கும் மாநாட்டிற்கு சென்றுவந்தவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், சிறுவன் மற்றும் போலீஸார் உட்பட மூவருக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

கொரோனோ வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், வேலைக்காக (சார்ஜா) சென்றிருக்கிறார். கொரோனா விவகாரத்தால் அவரை சொந்த ஊருக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த மாதம் வீடு திரும்பியவரை தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். 28 நாள்கள் முடிந்தபிறகு, அவர் வீட்டிற்குச் சென்று 4 வயது நிரம்பிய மகனோடு விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில், அந்தச் சிறுவனுக்கு கொரானோ தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதே பகுதியில் வி.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் ஒருவர், டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவரை அழைத்துவருவதற்காக அவரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்திற்குள் கிருமி நாசினி தெளிப்பு
காவல் நிலையத்திற்குள் கிருமி நாசினி தெளிப்பு

அப்போது, போலீஸ்காரர்களுக்கும் மாநாட்டிற்குச் சென்றுவந்த நபருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதிகளைத் தனிமைப்படுத்தவும்,

கொரானோ வைரஸ் சிகிச்சைப் பணி
கொரானோ வைரஸ் சிகிச்சைப் பணி

அவர்களுடன் பழகிய நபர்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வி.களத்தூர் காவல்நிலையத்தை கிருமி நாசினி தெளித்து, அதைத் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளை போலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரானோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு