Published:Updated:

"விளம்பரத்தைப் பார்த்து மருந்து; ஒரே மாதத்தில் 30 கிலோ எடை குறைவு!"- மகன் இறப்பு குறித்து கதிர்காமு

கதிர்காமு - அவர் மகன் அருண்குமார்
News
கதிர்காமு - அவர் மகன் அருண்குமார்

உடல்நலக்குறைவால் ​​சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த​ கதிர்காமுவின் மூத்த மகன் ​​அருண்கு​​மார் (38) ​டிசம்பர் 28​-ம் தேதி​ ​உயிரிழந்தார்.

"விளம்பரத்தைப் பார்த்து மருந்து; ஒரே மாதத்தில் 30 கிலோ எடை குறைவு!"- மகன் இறப்பு குறித்து கதிர்காமு

உடல்நலக்குறைவால் ​​சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த​ கதிர்காமுவின் மூத்த மகன் ​​அருண்கு​​மார் (38) ​டிசம்பர் 28​-ம் தேதி​ ​உயிரிழந்தார்.

Published:Updated:
கதிர்காமு - அவர் மகன் அருண்குமார்
News
கதிர்காமு - அவர் மகன் அருண்குமார்

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கதிர்காமு. பெரியகுளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், தற்போது அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். அரசு மருத்துவரான இவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றியவர்.​ ​இவருடைய இரு மகன்களும் மருத்துவத் தொழில் பார்த்து வந்தனர். இந்த நிலையில், ​உடல்நலக்குறைவால் ​​சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த​ இவரின் மூத்த மகன் ​​அருண்கு​​மார் (38) ​டிசம்பர் 28​-ம் தேதி​ ​உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அ​.​ம​.​மு​.​க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்​, ​கதிர்காமு​ வீட்டுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறி​ச் சென்​றார்​. இன்று முன்னாள் முத​ல்வர் ஓ.பன்னீர்செல்வம்​, தேனி ஸ்ரீராம் நகரிலுள்ள ​கதிர்காமு வீட்டுக்கு நேரில் சென்று​ ​ஆறுதல் கூறினார்.

ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்
ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்

இது குறித்து மருத்துவர் கதிர்காமுவிடம் விசாரித்தோம். ``என்னுடைய மகன் பலருக்கும் குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்தார். அவரின் ​​உடல் எடை 110 கிலோ இருந்தது. எடையைக் குறைக்க வேண்டும் என கடந்த ஓராண்டாக மருந்து எடுத்து வந்திருக்கிறார். மருந்து எடுத்த ஒரே மாதத்திலேயே 30 கிலோ வரை எடையைக் குறைத்திருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக... கோவை, சென்னை என முக்கியமான மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம்.

கதிர்காமு
கதிர்காமு

அப்போது மருத்துவர்கள், அவருடைய கல்லீரல் செயலிழந்துவிட்டதாகக் கூறினார்கள். மேலும் அதற்கு 80 சதவிகிதம் உடல் எடை குறைக்க எடுத்துக் கொண்ட மருந்துதான் காரணம் எனவும் தெரிவித்தார்கள். அந்த மருந்து எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட சிலர் என்னை தொடர்பு பேசினார்கள். ஆனால் மருந்து கம்பெனி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோர நான் தயாராக இல்லை. என்னுடைய மகனுக்கு நடந்தது, வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. மருத்துவராக இந்த மாதிரியான மருந்துகளை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்" என்றார்.

கதிர்காமு வீட்டுக்கு வந்திருந்த ஓ.பி.எஸ்
கதிர்காமு வீட்டுக்கு வந்திருந்த ஓ.பி.எஸ்

கதிர்காமுவின் நண்பரும் மருத்துவருமான கண்ணப்பன், அருண்குமாரின் இறப்பு குறித்து நம்மிடம் பேசினார். ​``எலும்பு முறிவு மருத்துவரான அருண்குமார்​ உடல் எடையை குறைக்க ஆன்லைன் மூலம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு வந்திருக்கிறார். அதன் விளைவால் கல்லீரல் செயலிழந்து, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்தவர் உயிரிழந்துவிட்டார். ஆய்வுக்கு உட்படுத்தாத மருந்துகள் விற்கப்படுவது ஆபத்தானது. எனவே நாட்டில் மருந்துகளுக்கான ஆய்வு கூடங்களை அதிகரிக்க வேண்டும். மருந்து எடுத்துக் கொள்ளும் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்படாத மருந்துகளை தடைசெய்ய வேண்டும். மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனை கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.