Published:Updated:

துளிர்க்கும் நம்பிக்கை... தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!

பிளாஸ்மா சிகிச்சை

பிளாஸ்மா தெரபி, சாலிடாரிட்டி சிகிச்சை ஆகிய இரண்டும் நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்திருப்தாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துளிர்க்கும் நம்பிக்கை... தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!

பிளாஸ்மா தெரபி, சாலிடாரிட்டி சிகிச்சை ஆகிய இரண்டும் நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்திருப்தாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா வைரஸுக்கு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் பல்வேறு வகையான சிகிச்சைகள், மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிக்கும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

Plasma treatment
Plasma treatment

இதில் பிளாஸ்மா தெரபி எனப்படும் சிகிச்சை மிகவும் நம்பிக்கையளிப்பதாகக் கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்த நோயாளியின் உடலில் இயற்கையாகவே கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) உருவாகியிருக்கும். குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அவற்றை நோயாளிக்குச் செலுத்தும்போது அவர்கள் குணமடைய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் டெல்லியில் முதன்முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தச் சிகிச்சைக்குத் திடீரென தடைவிதிக்கப்பட்டது.

சோதனை நோக்கத்துக்காக மட்டுமே மருத்துவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது மத்திய சுகாதாரத் துறை. அந்த வகையில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 7 நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

MMC dean Dr.Jayanthi
MMC dean Dr.Jayanthi

இது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தி கூறுகையில், ``கொரோனாவிலிருந்து குணமடைந்த 14 நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்மாவைக் கொண்டு 7 நபர்களுக்கு முதற்கட்டமாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சையில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) பரிந்துரையின்படி தமிழகத்தில் முதன்முறையாக இது நடைபெற்றிருக்கிறது.

அடுத்ததாக, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆரின் பரிந்துரைப்படி 'Solidarity Trial' எனப்படும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சையில் எபோலாவுக்கு வழங்கப்பட்ட ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து ஒரு நபருக்கும், ஹெச்.ஐ.வி தொற்றுநோய்க்கு வழங்கப்படும் லோபினாவிர் (Lopinavir), ரிட்டோனாவிர் (Ritonavir) ஆகிய இரண்டு மருந்துகள் கூட்டு மருந்தாக ஒரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ளன. சிகிச்சையின் முடிவு இன்னும் சில நாள்களில் தெரிய வரும்" என்றார்.

Solidarity treatment
Solidarity treatment

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கும் இந்தச் சிகிச்சைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதன்முதலில் சென்னையில் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்மா தெரபி, சாலிடாரிட்டி சிகிச்சை ஆகிய இரண்டும் நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்திருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.