Published:Updated:

மூடப்பட்ட காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்! - கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மதுரை

மூடப்பட்ட காவல்நிலையம்
மூடப்பட்ட காவல்நிலையம்

இவர்களுக்கு எந்தவழியில் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரப் பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் பணிபுரிந்த தெற்குவாசல் காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தீயணைப்பு வீரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரோனா சிறப்பு மருத்துவமனை
கொரோனா சிறப்பு மருத்துவமனை

மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இதுவரை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 15 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிலும், தற்போது பெரியார் தீயணைப்பு நிலைய குடியிருப்பு, வண்டியூர், அகிம்சாபுரம், கூடல்நகர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், ஆனையூரில் 3 பேருக்கும் செல்லூர் பகுதியில் மட்டும் 7 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி வெவ்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பரவியுள்ளதால் சமூகப் பரவல் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேரில் 5 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவார்கள். தற்போது இவர்கள் மதுரை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு எந்தவழியில் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரப் பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு என்பது டெல்லி சென்று வந்தவரைத் தொடர்ந்து, கோயில் அர்ச்சகரின் குடும்பத்தினர், காவல்துறையினர், மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பெரியவர், குழந்தைகள் எனப் பலருக்கும் பரவியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா
கொரோனா

நிலைமையின் விபரீதத்தை அறிந்து முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்று என்பதால், கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பல பகுதிகளை லாக் செய்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு