Published:Updated:

ஒமிக்ரான்: `2 மணி நேரத்தில் முடிவுகள்; ஆய்வகத்துடன் தனி வார்டு!’ - தயார்நிலையில் புதுச்சேரி

ஒமிக்ரான் வேரியன்ட்

"பெங்களூரு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குப் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலேயே சோதனைகளை மேற்கொள்வதற்கென தனியாகக் குழுக்களை அமைத்திருக்கிறோம்" - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு.

ஒமிக்ரான்: `2 மணி நேரத்தில் முடிவுகள்; ஆய்வகத்துடன் தனி வார்டு!’ - தயார்நிலையில் புதுச்சேரி

"பெங்களூரு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குப் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலேயே சோதனைகளை மேற்கொள்வதற்கென தனியாகக் குழுக்களை அமைத்திருக்கிறோம்" - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு.

Published:Updated:
ஒமிக்ரான் வேரியன்ட்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியது. அதையடுத்து படிப்படியாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இந்தத் தளர்வுகளால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் அதிகரித்திருக்கிறது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுவைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் தற்போதுவரை 29 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதனால் அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படியும் கூறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான்
ஒமிக்ரான்

அதேபோல அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஒமிக்ரான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றுக்காகப் புதுச்சேரியில் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் வென்டிலேட்டர்களுடன்கூடிய 105 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன்கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ஐ.சி.யூ-வில் 10 படுக்கைகளும், அதிநவீன ஆய்வகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் நூறு பேருக்குப் பரிசோதனை செய்து, இரண்டு மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு

அதேபோல மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து விகடனிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, “வெளிநாட்டிலிருந்து புதுச்சேரி வருபவர்கள் குறித்த விவரங்கள் குடியேற்றத்துறை மூலம் எங்களுக்கு முன்பே வந்துவிடும். அதனடிப்படையில் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் இரண்டு பேரை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல பெங்களூரு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலேயே காய்ச்சல் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கென தனியாகக் குழுக்களை அமைத்திருக்கிறோம்.

மாநிலத்துக்குள் வருபவர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா, காய்ச்சல் இருக்கிறதா என்று எல்லைகளில் ஆய்வு செய்வது குறித்து காவல்துறையுடன் கலந்தாலோசித்துவருகிறோம். அதேபோல அரசு மார்புநோய் மருத்துவமனையில் செயல்பட்டுவரும் கொரோனா பிரிவிலேயே ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு அனைத்து வசதிகளுடன் தனி வார்டு அமைத்திருக்கிறோம். போதுமான மருந்துகள் கையிருப்பில் இருக்கின்றன. எங்கள் மருத்துவர்குழுவினரும் தயார்நிலையில் இருக்கின்றனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism