Published:Updated:

நாய் கடித்து அடுத்தடுத்து பலி, வேலை செய்யாத தடுப்பூசி? - தரசோதனைக்கு கேரளா மத்திய அரசுக்கு கோரிக்கை!

நாய்க்கடி

ரேபிஸ் தடுப்பு மருந்தை 3 டோஸ் எடுத்தபோதும், கேரள மாநிலத்தில் 5 பேர் இறந்ததை அடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். தடுப்பூசியின் தரத்தை சோதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாய் கடித்து அடுத்தடுத்து பலி, வேலை செய்யாத தடுப்பூசி? - தரசோதனைக்கு கேரளா மத்திய அரசுக்கு கோரிக்கை!

ரேபிஸ் தடுப்பு மருந்தை 3 டோஸ் எடுத்தபோதும், கேரள மாநிலத்தில் 5 பேர் இறந்ததை அடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். தடுப்பூசியின் தரத்தை சோதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Published:Updated:
நாய்க்கடி

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, ஆகஸ்ட் 14 -ம் தேதி, தெருநாய் பலமுறை கடித்தது. இதில் முகம் மற்றும் கண்களில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்று தவணைகள் தடுப்பூசி செலுத்திய நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருந்தது.

தெரு நாய்
தெரு நாய்

இதனிடையே, தொடர் சிகிச்சையில் இருந்த அந்தச் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர், கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தார். கேரளாவில், கடந்த சில நாள்களில் மட்டும் 5 நபர்கள் நாய் கடித்ததாக மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தடுப்பூசிகளின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் பணியை, மத்திய மருந்து ஆய்வகம் மேற்கொள்கிறது. இதன் மூலம் சான்றிதழ் அளிக்கப்பட்ட தடுப்பூசிதான் சமீபத்தில் நாய்க்கடியால் இறந்த 5 பேருக்கும் போடப்பட்டது. இப்படி தடுப்பூசி போட்ட பிறகும் அவர்கள் இறந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், `பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி மற்றும் தொகுதி எண் தொடர்பான விவரங்களுடன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியின் தரத்தை மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார். தெருநாய் கடித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை பிரசாரம் மேற்கொண்டுள்ளதுடன், 7 நபர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் வீணா ஜார்ஜ்
அமைச்சர் வீணா ஜார்ஜ்

நாய் கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள்

*நாய் கடித்த இடத்தில் சோப் கொண்டு உடனடியாக 2 முறைக்கு மேல் கழுவவும்.

* சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

* கடித்தது வீட்டு நாயாக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்ட நாயாக இருந்தாலும் கண்டிப்பாக மூன்று தவணை தடுப்பூசிகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.