Published:Updated:

`செவிலியர் மூலம் பரவிய கொரோனா தொற்று!' - ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ராக் ஹிஸ்டரி

மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.
மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, ஆனந்தூர், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள், தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்த மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு கொரானோ தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கொரோனோ சிகிச்சை
கொரோனோ சிகிச்சை

ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரானோ தொற்று மிகவும் குறைவான அளவிலேயே இருந்து வந்தது. 3 வாரங்களுக்கு மேலாக ஒற்றை இலக்கத்திலேயே இருந்துவந்த இந்த எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, ஆனந்தூர், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் குணமடைந்த நிலையில், அவர்கள் வீட்டுக்கு அனுப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றிவந்த பெண் ஒருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. தொண்டியைச் சேர்ந்த இவர் மாற்றுப்பணிக்காக ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காகப் பல்வேறு இடங்களுக்கு சக பணியாளர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்துள்ளார்.

உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம்
உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம்
உ.பாண்டி

இவருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கொரோனோ நோய்த் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பணியாற்றிவந்த உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அங்கு நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க கிருமிநாசினி மூலம் சுத்தப்படும் பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மூடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மூடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

இதனிடையே இவருடன் பணிக்குச் சென்றவர்கள், வாகனத்தில் பயணித்தவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். இதனால் உச்சிப்புளி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு