Published:Updated:

புதுச்சேரி: `இனியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது மன்னிக்க கூடியதில்லை!’ - ஆளுநர் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்
News
தமிழிசை சௌந்தரராஜன்

”பெரியவர்கள் தடுப்பூசிக்கு பயந்து ஓடினார்கள். சுகாதர பணியாளர்களை திட்டினார்கள். மரத்தில் ஏறினார்கள். ஆனால் மாணவர்கள் எந்தவித சுணக்கமோ எதிர்ப்போ இன்றி தடுப்பூசி போட்டு கொண்டனர்” புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுச்சேரி வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி - தடுப்பூசி
புதுச்சேரி - தடுப்பூசி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``பெரியவர்கள் தடுப்பூசிக்கு பயந்து ஓடினார்கள். சுகாதார பணியாளர்களை திட்டினார்கள். மரத்தில் ஏறினார்கள். ஆனால் மாணவர்கள் எந்தவித சுணக்கமோ எதிர்ப்போ இன்றி தடுப்பூசி போட்டு கொண்டனர். அதனால் இனி பெரியவர்கள் தடுப்பூசி போட மாட்டேன் என்பது மன்னிக்க கூடியதில்லை. பல மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை கொரோனா அபாயகரமாக தாக்குவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புதுச்சேரியில் தற்போதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 82% பேரும், இரண்டாவது தவணையை 58% பேரும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 1 லட்சம் பேருக்கு போட வேண்டும். நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் நடக்கவிருக்கும் தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் காணொளியில் துவக்கி வைக்கிறார். பள்ளிகளில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறோம். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்வோம்” என்றார்.

``சின்ன பிரச்னை வந்தால் கூட பள்ளிகள் மூடப்படும்” என்றவர், பஞ்சாப் சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ``நாடு முழுவதும் ஆளுநரிடம் பா.ஜ.க மனு அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று பா.ஜ.கவினர் அளித்தனர். இன்று மாலை தெலங்கானாவில் என்னிடம் பா.ஜ.கவினர் மனு அளிக்கிறார்கள். அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்போம். நம் அனைவரின் பிரார்த்தனையும் பிரதமர் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதனை அவரவர்கள் அவர்களது வழியில் வெளிபடுத்தி வருகிறார்கள். ஜனாதிபதியின் பிரதிநிதியாக நாங்கள் இருப்பதால் அந்த மனுக்களை அவருக்கு அனுப்பி வைப்போம்” என்றார்.