Published:Updated:

கொரோனா: தமிழகச் சிறைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

கொரோனா காலத்தில் சிறைச்சாலைக்கு வரும் கைதிகளை நேரிடையாக உள்ளே விடுவதில்லை. இவர்களைப் பரிசோதிப்பதற்காக, முழுமையான மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுடன் 35 சிறைச்சாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதலில் அங்கேதான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்பு தமிழகச் சிறைச்சாலைகளில் மொத்தம் இருந்த கைதிகள் சுமார் 15,500 பேர். இவ்வளவு பேரையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும்போது, ஏதாவது எதிர்பாராத காரணத்தால் கொரோனா தொற்று பரவினால் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடும். இதை ஆரம்பகட்டத்திலேயே உணர்ந்த தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகர் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழக லீகல் அத்தாரிட்டி கமிட்டியின் சேர்மனாக இருப்பவர் வினித் கோத்தாரி. இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்தகட்ட அந்தஸ்தில் இருப்பவர். சிறைக்கைதிகள் குறித்து முடிவெடுக்க, வினித் கோத்தாரி, பிரபாகர், சிறைத்துறை டி.ஜி.பி போன்ற முக்கியமானவர்களை உள்ளடக்கிய குழு ஒன்று போடப்பட்டது. இந்தக் குழுவின் நடவடிக்கையை மத்திய அரசின் சட்டத்துறை கண்காணிக்கிறது. அவர்கள் எடுத்த சில விஷயங்களைப் பார்ப்போம்...

Representational Image
Representational Image

* தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. மாவட்டம் மற்றும் தாலுகா லெவலில் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை சுமார் 140. இவை அனைத்திலும் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என்கிற வகையில் சுமார் 22,000 பேரை அடைத்து வைக்க முடியும். கொரோனா தொற்று சமயத்தில் உள்ளே இருந்தவர்கள் 15,500. இவர்களில் விசாரணைக் கைதிகளாக இருந்த சுமார் 4500 பேரில் சிறு குற்றங்கள் செய்தவர்கள் யார் யார் என்று லிஸ்ட் எடுத்து லீகல் கமிட்டியில் வைத்து ஆலோசனை நடத்தினார்களாம். பிறகு, வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் அவர்கள் வழக்கு நடக்கும் நீதிமன்ற நீதிபதிகள் 30 நாள்கள் வெளியே பெயிலில் போக அனுமதித்தனர். அப்படி ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு எப்படி போவது என்று தவித்தனர். உடனே, தமிழக உளவுத்துறை சார்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தார்களாம்.

* கொரோனா காலத்தில் சிறைச்சாலைக்கு வரும் கைதிகளை நேரிடையாக உள்ளே விடுவதில்லை. இவர்களைப் பரிசோதிப்பதற்காக, முழுமையான மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுடன் 35 சிறைச்சாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதலில் அங்கேதான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மருத்துவப்பரிசோதனை நடத்தி, 14 நாள்கள் வைத்து கண்காணித்து கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிந்துகொண்டபிறகுதான், பொதுவான சிறைச்சாலைக்கு மாற்றுகிறார்களாம்.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

* தற்போது தமிழகச் சிறைச்சாலைகளில் சுமார் 11,500 தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள். லேண்ட் லைன் போன் வசதி வழக்கமாக உண்டு. அதன்மூலம் சிறைச்சாலைவாசிகள் குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் குடும்பத்தினருடன் பேச முடியும். தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விசிட்டர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதை ஈடுகட்டும் வகையில், வீடியோகால் வசதி உள்ள நவீன செல்போன்கள் 60 வாங்கி பயன்பாட்டிற்குக் கொடுத்திருக்கிறார்கள். சிறைக்கைதிகள் இப்போது அவரவர் குடும்பத்தினருடன் வீடியோ போனில் பேசி மகிழ்கிறார்கள்.

Representational Image
Representational Image

* கொரோனா நேரத்தில் நீதிமன்றம், சிறைத்துறை அனுமதியுடன் பல்வேறு அவசர காரணங்களுக்காக சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சுமார் 25 பேர். அவர்கள் அனைவரும் ஏப்ரல் 30 வரை திரும்பி வரவேண்டாம். பிறகு வரலாம் என்று முறைப்படியான அனுமதி அளித்திருக்கிறார்கள். அவர்கள் லீவு முடிந்து திரும்பி வரும்போது, கொரோனா தொற்று தெரிந்தால் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்போவதில்லை. மத்திய அரசு உத்தரவுப்படி, சுமார் 35 சிறைச்சாலைகளை அடையாளம் கண்டு அவற்றை தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அங்கேதான் அவர்களை அடைக்கப்போகிறார்கள்.

* வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட், விசா சட்டப்படி குற்றம்சாட்டப்படுகிறவர்கள் எண்ணிக்கை சுமார் 100 பேர். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தமிழகப் பொதுத்துறையின் கண்காணிப்பில் வருகிறார்கள். அவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு, திரும்பி வரும்போது, அவர்களுக்காக ஆங்காங்கே உள்ள சிறைச்சாலைகளில் தனியாக இடம் ஒதுக்கி தனித்து தங்கவைக்க ஏற்பாடு நடக்கிறது. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியபிறகுதான், ஏனைய சிறைக்கைதிகள் உள்ள ஷெல்களில் அடைக்கிறார்கள்.

Representational Image
Representational Image

* பரோலில் சென்றவர்கள், பெயிலில் சென்றவர்கள்... என்று கொரோனா ஊரடங்கு முடிந்து திரும்பும்போது மெடிக்கல் செக்போஸ்ட்டை அவர்கள் சிறைச்சாலை நுழைவாயிலில் சந்திக்கவேண்டும். யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சிறப்பு முகாம்களை தற்காலிகமாக அமைத்து வருகின்றனர். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், ஏற்கெனவே சிறைச்சாலையில் உள்ளவர்களுடன் இவர்களை அடைக்க சுமார் 14 நாள்கள் ஆகும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கொரோனா தடுப்பை சிறை அதிகாரிகள் சிறப்பான முறையில் கையாள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு