Published:Updated:

சானிடரி நாப்கின் பாக்கெட்டுகளுடன், மக்கும் டிஸ்போசபிள் பைகள்! -அதிரடி காட்டும் மத்திய அரசு

சானிடரி நாப்கின்
சானிடரி நாப்கின் ( Freepik )

வரும் ஜனவரி மாதம் முதல் இந்த உத்தரவை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சானிடரி நாப்கின் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்யும் நாப்கின் பாக்கெட்டுகளுடன் மக்கும் டிஸ்போசபிள் பைகளையும் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

napkin
napkin

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ``சானிடர் நாப்கின்களுடன் மக்கும் டிஸ்போசபிள் பைகளை வழங்க வேண்டும் என்று நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களிடம் பலமுறை தெரிவித்தும், இது நடைமுறைக்கு வரவில்லை. அதனால் வரும் ஜனவரி மாதம் முதல் இந்த உத்தரவை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் ஒரு மாதத்தில் 12 முதல் 15 நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். 12 மாதத்துக்கு ஒரு பெண் 150-க்கும் மேற்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்தி, அதை டிஸ்போஸ் செய்கிறார். இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 35 கோடி நாப்கின்கள் டிஸ்போஸ் செய்யப்படுகின்றன. ஓர் ஆண்டில் 13,000 டன் நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகின்றன.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

பயன்படுத்தப்பட்ட ஒரு நாப்கினை 800 டிகிரி வெப்பத்தில் தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு எரித்தால்தான் அது முழுமையாக எரிந்ததாக அர்த்தம். அப்படி எரிக்கும்போது நாப்கினிலிருந்து வெளியாகும் ரசாயனங்கள் காற்றில் கலந்து அவை மனிதனுக்கு ஆபத்தானதாக மாறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியிருக்கும் நாப்கின்களை மக்க வைப்பதற்கு அல்லது அழிப்பதற்கான வழிகளை ஆராயாமல், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான பைகளை மட்டும் மக்கும் விதமாகத் தயாரிப்பதில் என்ன பயன் இருக்கிறது என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சானிடரி நாப்கின்
சானிடரி நாப்கின்
மாதவிடாய்... அறிந்ததும் அறியாததும்! A to Z தகவல்கள் #HappyPeriods #AllAboutMenstruation

இதுகுறித்த கேள்விக்கு, `காற்று மாசுபாட்டுக்கும் மனிதனின் ஆயுசு குறைவதற்கும் தொடர்பில்லை' என்று கருத்து கூறிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்தான் பதில் கூற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு