Published:Updated:

சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனை ஏன்?

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

இந்தப் பரிசோதனை இரண்டு விதமாக மேற்கொள்ளப்படும். முதலில், கைதானவருக்கு உடலில் ஏதாவது காயங்கள் இருக்கின்றனவா, வேறு ஏதாவது உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று சோதிக்கப்படும்.

காவல்துறையினர் தாக்கியதில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முன்பு கைதிகளுக்கு நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உடலில் காயங்கள் இருந்தபோதும், அவர்களைப் பரிசோதித்த அரசு மருத்துவர் வினிலா, 'இருவருக்கும் உடலில் காயங்கள் எதுவும் இல்லை’ என மருத்துவச் சான்றிதழ் கொடுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் வினிலா, சிபிசிஐடி போலீஸார் விசாரணை வரை கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர் வினிலா
மருத்துவர் வினிலா

கைதாகி சிறையில் இருக்கும் ஒருவரை மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனை ஏன்? அது எவ்வாறு மேற்கொள்ளப்படும்? சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

சாத்தான்குளம்: `2 மணிநேர விசாரணை!’ - பதற்றத்துடன் காணப்பட்ட அரசு மருத்துவர் வினிலா

``காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு அவர்களின் கஸ்டடியில் இருக்கும் கைதிகள் அடுத்தகட்ட விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கைதானவரின் உடல்நிலையும் மனநிலையும் நல்ல நிலையில் உள்ளனவா, காவல்துறையினரால் அவர் ஏதாவது துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா ஆகியவற்றை உறுதிசெய்யவே இந்தப் பரிசோதனை.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஓர் அரசு மருத்துவமனைக்கு அந்தக் கைதியை போலீஸார் அழைத்துச் செல்வர். அங்கிருக்கும் அரசு மருத்துவர்களில் ஒருவர் கைதிக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வார்.

இந்தப் பரிசோதனை இரண்டு விதமாக மேற்கொள்ளப்படும். முதலில், கைதானவருக்கு உடலில் ஏதாவது காயங்கள் இருக்கின்றனவா, வேறு ஏதாவது உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று சோதிக்கப்படும். அவசியமிருப்பின் ஸ்கேன், எஸ்க்ரே போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும்.

சாத்தான்குளம்: `சி.பி.ஐ-யின் நள்ளிரவு விசாரணை!’ - என்ன காரணம்?

அடுத்ததாக அவருக்கு மனநலனில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர் மருத்துவச் சான்றிதழ் அளிப்பார். அதில், கைதியின் உடல்நிலை குறித்த தகவல்கள் இருக்கும். அவருக்கு உடலில் ஏதாவது காயங்கள், வீக்கம், ரத்தக்கட்டு இருப்பின் அவை எல்லாமே அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மருத்துவச் சான்றிதழ்
மருத்துவச் சான்றிதழ்

மருத்துவர் தரும் சான்றிதழை வைத்தே சம்பந்தப்பட்ட கைதியிடம் அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், அதில் உள்ள எல்லா தகவல்களும் உண்மையானதாக இருக்க வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர் தன் சுயநலத்திற்காகவோ, மற்றவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே உண்மைக்குப் புறம்பான தகவல்களை அதில் குறிப்பிடக்கூடாது. அப்படிச் செய்தால் அவர் தண்டனைக்கு உரியவரே" என்றார் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

அடுத்த கட்டுரைக்கு