கொரோனாவினால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவியாக அரசு கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. இழப்பீட்டுத் தொகை குறித்து அறிந்த மக்கள் அதற்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், இந்தக் தகவல் குறித்து அறியாதவர்களும் உள்ளனர்.
எனவே, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை சரியாகச் சென்று சேர்வதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தொழில் நுட்ப காரணத்திற்காகவும் இழப்பீட்டுத் தொகை சென்று சேராமலும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்கள் தாக்கல் செய்த பிராமண பத்திரங்களில், அரசு சார்பில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்பு வழக்குகளை விட, அவர்கள் இழப்பீடு கோரி பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இருந்த போதிலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று பலருக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில கோரிக்கைகள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கேரளா, பஞ்சாப், கர்நாடகா, அசாம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு பதிவு செய்த கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட, குறைவான அளவே இழப்பீடு கேட்டு விண்ணப்பங்கள் வந்ததாகவும், இந்த குறைவான பதிவு கவலை அளிப்பதாகவும், தொழில் நுட்பம் சேராத இடங்களில் மக்களுக்கு இழப்பீடு குறித்த தகவலைக் கொண்டு சேர்க்கவும், தாய், தந்தை என இருவரையும் இழந்த 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பணம் சேர்வதை உறுதிபடுத்திக் கொள்ளவும், மேலும் ந்த ஒரு நபருக்கும் இழப்பீடு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது என்பதையும் சரிபார்த்துக் கொள்ள மாநிலங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 38,000 குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு, பிராமண பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.