Published:Updated:

மதுரை: `நாம் அபாயகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்!’ - சுட்டிக்காட்டும் எம்.பி சு.வெங்கடேசன்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவைப்படுவதோ 7 மெட்ரிக் டன்.

மதுரை: `நாம் அபாயகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்!’ - சுட்டிக்காட்டும் எம்.பி சு.வெங்கடேசன்

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவைப்படுவதோ 7 மெட்ரிக் டன்.

Published:Updated:
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

``ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்’’ என்று அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

தற்போது நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் பார்த்து ஒவ்வொரு மாநில மக்களும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், இது போன்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அறிக்கை மூலம் அரசுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப் பற்றி நம்மிடம் பேசியபோது, ``தமிழகத்தின் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஆனால், கடந்த சில நாள்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது நாம் அபாயகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவைப்படுவதோ 7 மெட்ரிக் டன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தருமபுரி மாவட்டத்துக்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தேவைப்படுவதோ தினமும் 3 மெட்ரிக் டன்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

நாமக்கல் மாவட்டத்துக்கு தினமும் 6 மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், அங்கு தேவைப்படுவதோ 10 மெட்ரிக் டன்.

திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தினசரித் தேவையோ 5 மெட்ரிக் டன்.

தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால், அங்கு தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாள்களாக ஆக்ஸிஜன் விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், அங்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இப்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆக்ஸிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாகக் கூடுகிறது. தமிழக அரசிடம் இப்போது நாம் எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்தான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism