Published:Updated:

``குரங்கு அம்மை பாதிப்பு தமிழ்நாட்டில் இதுவரை இல்லை..!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``குரங்கு அம்மை பாதிப்பு தமிழ்நாட்டில் இதுவரை இல்லை..!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

``தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தலைமைச் செயலக வளாகத்தில் பூஸ்டர் டோஸ் முகாமைத் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், ``தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். இன்றைய தினம் முகாமில் தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. தற்போது விலையில்லாமல் அரசு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன.

பூஸ்டர் டோஸ்
பூஸ்டர் டோஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், மாநிலக் கல்லூரி வளாகத்திலும், சென்னையில் இயங்கும் மற்ற கல்லூரிகளிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்படும். வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு (FMG) இந்தியாவில் பயிற்சிக் கட்டணம் ரூ.3,20,000-திலிருந்து ரூ.30,000-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யத் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

இதற்காக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்துக்கு மூன்றரை லட்சம் ரூபாயும், அந்தந்தக் கல்லூரிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தொடர் கோரிக்கையின் காரணமாக இந்தத் தொகை தற்போது வெகுவாக குறைக்கப்பட்டு 29,400 -ஆக நிர்யணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது" என்றார்.

- க.ஸ்ரீநிதி (மாணவப் பத்திரிகையாளர்)