Election bannerElection banner
Published:Updated:

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவில் சிக்கல்... என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

A woman receives the COVAXIN vaccine
A woman receives the COVAXIN vaccine ( AP Photo / Anupam Nath )

மே 1-ம் தேதி தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று (ஏப்ரல் 28) தொடங்கியது.

18 வயதுடையோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ம் தேதி முதல் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு CoWIN அல்லது Aarogya Setu மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மே 1-ம் தேதி தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று (ஏப்ரல் 28) தொடங்கியது.

Co-Win Website
Co-Win Website

இந்த அப்ளிகேஷனில் முன்பதிவு செய்வதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தேதி, நேரம், இடம் ஆகியவை ஒதுக்கப்படும். இந்நிலையில் இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நேற்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஸ்லாட் ஓப்பன் ஆகவில்லை என்று பலர் புகார் தெரிவித்தனர். இன்னும் சிலருக்கு மொபைல் ஆப்களில் உள்நுழையவே முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதுபோன்ற பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன, பிரச்னை எப்போது சரியாகும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபுவிடம் கேட்டோம்:

``CoWIN, Aarogya Setu இரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அப்ளிகேஷன்கள். அவற்றின் பயன்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் மத்திய அரசின் கண்காணிப்பில்தான் உள்ளன. நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. இந்த அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

DME Dr. Narayanababu
DME Dr. Narayanababu

இதன் காரணமாக நேற்று நாடு முழுவதுமுள்ள பல கோடி பேர் இதில் முன்பதிவு செய்வதற்காக முயன்றிருப்பார்கள். அதனால் இதுபோன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் படிப்படியாக சீராகிவிடும். மே 1-ம் தேதிக்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ளதால், தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகிவிடும்.

எனவே, தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தடுப்பூசி போடுவதற்கு தாமதிக்க வேண்டாம். முன்பதிவு செய்வதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி
AP Photo / Manish Swarup
கோவிட் 19: `சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்!' - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்" என்றார்.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது சாத்தியமா என்று கேட்டதற்கு, ``தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை. அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் மருத்துவமனைகள் எனப் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Vaccination
Vaccination
Manish Swarup

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தேவையான தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்படும். முன்பதிவுக்கு ஏற்றாற்போல் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படும். எனவே, பொதுமக்களுக்கு எந்த அச்சமும் வேண்டாம்" என்றார் அவர்.

இதே கேள்வியை பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் முன் வைத்தோம்.

``முன்பதிவில் பிரச்னை இருப்பதாக எங்களுக்குப் பெரிய அளவில் புகார்கள் எதுவும் வரவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதைப்பற்றிய தொழில்நுட்ப விவரங்களுக்கு மத்திய அரசைத்தான் அணுக வேண்டும்.

A woman receives the AstraZeneca vaccine
A woman receives the AstraZeneca vaccine
AP Photo / Aijaz Rahi
`முழு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இனி மாஸ்க் வேண்டாம்!' - அமெரிக்காவில் தளர்வு

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும், தடுப்பூசி இருப்பு வைப்பது, விநியோகம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் தொடர்பான உயர்நிலை மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்குப் பிறகு அது பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு