Published:Updated:

கொரோனாவைச் சமாளிக்க தெலங்கானா அரசுக்கு அனுபமா சத்ய நாதெள்ளா ரூ.2 கோடி நிதி!

தெலங்கானா
தெலங்கானா

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு இந்தியா முழுவதும் மார்ச் 24 நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் தினசரி வருமானம் தரும் வேலையில் இருந்த பலரும் இப்போது தவித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும் நிவாரண நிதிகளையும் வழங்கி வருகின்றன. வீடற்று சாலைகளில் வசிப்போரை மீட்டு, உணவு, உடை போன்றவற்றை வழங்கும் முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவருகின்றன.

`21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ -  பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பாதிப்பைச் சமாளிக்க, அம்மாநில அரசுக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் தங்கள் பங்களிப்பை முதல்வர் நிவாரண நிதித் திட்டத்துக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், அனுபமா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சத்ய நாதெள்ளாவின் மனைவி), தெலுங்கானா மாநிலத்தில் நிலவும் நெருக்கடியைக் கருத்தில்கொண்டு தன் பங்களிப்பாக ரூபாய் 2 கோடியை, தன் தந்தையின் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தெலுங்கானா அரசு, ``ரூபாய் 2 கோடிக்கான காசோலையை அனுபமாவின் தந்தையும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வேணுகோபால் முதல்வரிடம் வழங்கியுள்ளார். மாநிலத்தில் பரவிவரும் நோய்த்தொற்றை தடுத்து, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இந்த நிதி பயன்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.

தெலங்கானா
தெலங்கானா

இதேபோல தெலங்கானா மாநிலப் பள்ளி ஆசியர்களும் தங்கள் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை நிதியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக ரூபாய் 48 கோடியை இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். பிரபல சினிமா நடிகரான நிதின், 10 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை?' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்

கொரோனா பேரிடருக்கு நிதிஉதவி அளித்தவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ள முதல்வர், அவர்களின் பங்களிப்பு குறித்து, தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு