Published:Updated:

``தற்போதைய காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்படுகிறது!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்

``தற்போதைய காய்ச்சல் பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிறது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை” என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

``தற்போதைய காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்படுகிறது!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தற்போதைய காய்ச்சல் பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிறது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை” என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் இருக்கிற இடங்களைக் கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அந்த வகையில், நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த காலங்களில், குறிப்பாக பருவநிலை மாற்றங்களின்போது வருகிற அளவுதான் இப்போதும் இருக்கிறது. தற்போதுள்ள காய்ச்சல் பருவநிலை மாற்றங்களால் ஏற்படுவதுதான்.  இது ஒரு தனி வைரஸின் பாதிப்பு என பயப்படத் தேவையில்லை.  

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் வட்டார, மாவட்ட அரசு மருத்துமனைகள் என 11,333 மருத்துவ மையங்களில் போடப்படவிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி 96 சதவிகிதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 91 சதவிகிதமும், மாணவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி 12 முதல் 14 வயது பிரிவினருக்கு 90 சதவிகிதமும், 15 முதல் 17 வயது பிரிவினருக்கு 92 சதவிகிதமும் கடந்திருக்கிறோம்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு என்பதே இல்லை.  அப்படி பொதுமக்கள் ஏதாவது ஒரு மருத்துவமனைக்குப் போய் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று சொன்னால் 104 என்கிற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்” என்றார்.