Published:Updated:

கேரள எல்லையோரப் பழங்குடிகளைப் பாதுகாக்க வீடுவீடாகச் செல்லும் அங்கன்வாடி ஊழியர்கள்!

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

தமிழக - கேரள எல்லையான பந்தலூர் தாலூகாவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் செல்வதைத் தற்காலிகமாக தவிர்க்க வீடுவீடாகச் சென்று அரசு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது `கோவிட்-19' எனப்படும் கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாளுக்கு நாள் உயிர்ப்பலி தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்திய அளவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐக் கடந்திருக்கிறது. இதனால், வெளிநாட்டுப் பயணி ஒருவர் உட்பட 5 பேர் இந்தியாவில் உயிரிழந்திருக்கின்றனர்.

தோடா பழங்குடியினர்
தோடா பழங்குடியினர்

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, நமது அண்டை மாநிலமான கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்திலும் வேகமாகப் பரவிவருகிறது. அந்த மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கைக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசும் மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த இரண்டு மாநிலங்களையும் எல்லையாக கொண்டுள்ள நீலகிரியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மாஸ்க்
மாஸ்க்

நீலகிரியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் கேரள எல்லையோர பகுதியில் உள்ள பழங்குடிகளைக் காக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம், உறவினர்கள் என கேரள மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இதனால் இவர்களுக்கு கேரளாவில் இருந்து தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ``நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையோரக் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள், `அண்டை மாநிலமான கேரளாவுக்கு தற்காலிகமாக வேலை மற்றும் வேறு காரணங்களுக்காகச் செல்ல வேண்டாம்’ என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு