Published:Updated:

திருச்சி: திருமணம் மீறிய உறவு... தனக்குத் தானே பிரசவம் - முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

குழந்தை

பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு, பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: திருமணம் மீறிய உறவு... தனக்குத் தானே பிரசவம் - முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு, பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
குழந்தை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோயில் அருகே நேற்று பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதைப்ப் பார்த்து பதறிப்போய் உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே ஆண்டவர் கோயில் அருகிலுள்ள மான் பூண்டி ஆற்றின் முட்புதர் பகுதியிலிருந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக பொதுமக்கள் ஓடிப்போய் பார்க்க, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று முட்புதர்களுக்கு இடையே கதறியபடி கிடந்திருக்கிறது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்
மாதிரிப் படம்

அதைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள் உடனே ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த இரு விவகாரங்கள் பற்றித் தகவல் தெரிந்ததும் மணப்பாறை போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்த, `முட்புதரில் குழந்தையை வீசிச்சென்றது நான்தான். அது என்னுடைய குழந்தை’ என்றதோடு அதிரவைக்கும் வகையில் நடந்த உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். அவர், `என்னோட பெயர் ஜெயா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 38 வயசு ஆகுது. மணப்பாறையை அடுத்த இனாம்ரெட்டியபட்டிதான் என்னோட சொந்த ஊர். எட்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் இறந்துட்டாரு. எனக்கு 8 வயசுல பெண் குழந்தை ஒண்ணு இருக்கு. இதுக்கிடையில, ஒருத்தரோட எனக்கு இருந்த தொடர்புல குழந்தை உண்டாயிடுச்சு. நேத்து ஆண்டவர் கோயில்கிட்ட வர்றப்ப திடீர்னு வயிற்றுவலி உண்டாச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனா தேவையில்லாத சிக்கல்னு நானே முள்காட்டுல பிரசவம் பார்த்தேன். குழந்தை பிறந்ததும் அதை அங்கயே போட்டுட்டு வந்துட்டேன். பிரசவம் ஆன களைப்புலயும், வெயில் தாங்க முடியாமயும் கோயில் பக்கத்துல மயங்கிப் படுத்துட்டேன்’ என்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ் சித்திரிப்பு படம்
போலீஸ் சித்திரிப்பு படம்

இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``திருமணம் தாண்டிய உறவால் ஜெயா கர்ப்பமானது குறித்து அவரின் வீட்டில் சொல்ல பிரச்னையாகியிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக எந்தவித ஆதரவுமில்லாமல் இருந்துவந்தவருக்கு, திடீரென பிரசவவலி வந்து தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு, குழந்தையைக் காட்டிலேயே வீசிவிட்டு வந்திருக்கிறார். இப்போது தாயும் குழந்தையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயரதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்றுதான் குழந்தையை காப்பகத்தில் சேர்ப்பதா அல்லது என்ன செய்யவது என முடிவெடுக்க முடியும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism