Published:Updated:

`சர்வதேச விமானங்களுக்குத் தடை; முதியவர்கள், குழந்தைகள் வெளியேற வேண்டாம்!’- மத்திய சுகாதாரத்துறை

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் நான்கு பேரும் 60 வயதைத் கடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றன.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் லாவ் அகர்வால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பயணிகள் விமானம் சரக்கு விமானம் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச விமானங்களுக்கும் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையானது தற்காலிகமானதுதான். கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து மீண்டும் மறுபரீசிலனை செய்யப்படும்.

`இதுக்குமா விஐபி அந்தஸ்தைப் பயன்படுத்துவது?’ - இளைஞரை சாடிய முதல்வர் மம்தா

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசானது கேட்டுக்கொள்கிறது. மேலும் அவர்கள் அனைவரும் முறையான மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைத் தவிர அனைவரும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடுகளில் இருந்தால் அவர்களை பெரும்பாலும் வீட்டிலிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

`சர்வதேச விமானங்களுக்குத்  தடை; முதியவர்கள், குழந்தைகள் வெளியேற வேண்டாம்!’- மத்திய சுகாதாரத்துறை

ரயில்கள் மற்றும் விமானங்களில் அதிகப்படியான மக்கள் பயணம் செய்வதை தடுக்கும் வண்ணம் இந்த இருபோக்குவரத்திலும் மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை தவிர மற்ற பிரிவினருக்குச் சலுகைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. மருத்துவம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீடுகளிலேயே பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகமூடிகள் மற்றும் சானிடைசர்கள் அதிகவிலைக்கு விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. யாரும் பீதியடைய வேண்டாம். செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். N-95 முகமூடிகள் நாட்டில் போதுமான அளவில் கிடைக்கின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு