Published:Updated:

``தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்
News
மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்

`தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை​. ​​தமிழகத்​தில் 32 இடங்களில் ​உள்ள ​தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக வெளியிட​ப்படும்.' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published:Updated:

``தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

`தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை​. ​​தமிழகத்​தில் 32 இடங்களில் ​உள்ள ​தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக வெளியிட​ப்படும்.' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்
News
மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை அமைச்சர்

​தமிழ்நாடு மூலிகை தாவர வாரியம் சார்பில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு  கருத்தரங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம் வளாகத்தில் நடைபெற்றது​. ​கூட்டுறவு​த்​துறை அமைச்சர் ஐ​.​பெரியசாமி​, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய​ன்​, உணவு​த்​துறை அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளிட்டோர் ​பங்கேற்றனர். 

அஸ்வகந்தா பயிரிடுதல்
அஸ்வகந்தா பயிரிடுதல்

இதில் அமைச்சர் மா​.​சுப்பிரமணிய​ன்​, ``முதல்வர் அறிவித்த 136 அறிவிப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது​.​ 136 அறிவிப்புகளில் இந்திய மருத்துவத்துக்கு மட்டும் சித்தா​, ​ஆயுர்வேதம்​,​ யுனானி​,​ யோகா​,​ ஹோமியோபதி என ஒன்பது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன​.​ இதுவரை ​6​ அறிவிப்புகள் இந்த துறையின் சார்பில் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன​.​ ​இரண்டு​ அறிவிப்புகள் இங்கே நடைமுறைக்கு வர தொடங்கியிருக்கின்றன​.​ இன்னும் மூலிகை பொருள்களின் மூலம் அழகு சாதன பொருள்கள் தயாரிக்கிற அந்த அறிவிப்பு மட்டும்தான்​ தொடங்கப்படாமல்​ உள்ளது.​  அந்தப் பணிகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன​.

​திண்டுக்கல் மாவட்ட​த்தில் அஸ்வகந்தா என்று சொல்லப்படுகிற ஒரு சித்த மருத்துவத்திற்குரிய மூலிகைச்செடி  200 ஏக்கரில் வளர்க்கப்படுகிறது​. இந்த பயிர்கள் வளர்ந்து இது பெரிய பலன் கிடைக்​கும். இந்த அஸ்வகந்தா மூலிகை செடி ஆந்திரா,​ குஜராத்​,​ மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் பயிரிடப்படுகிறது​.​ ​இதைப் பயன்படுத்தி லேகிய​ம், டானிக் போன்றவை தயாரிக்கப்படுகின்றன​. தமிழகத்தில் பயிரிடுவதன் மூலம் நமக்கு பெரிய அளவில்  சித்த மருத்துவத்திற்கு ஒரு உயிர்ப்பான நிலை தமிழகத்திலே உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது​. ​திண்டுக்கல் பகுதிகளில் தொடங்கப்படவிருக்கிற இந்த பயிர் திட்டத்தின் மூலம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய அளவிலான வர்த்தகமும் விவசாய பெருமக்களுக்கு நன்மையும் கிடைக்கும்​. மூலிகை பயிர்களை பயிரிடுவதன் மூலம்​ ​சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கு​ம்.

ஆய்வு
ஆய்வு

​சித்த மருத்துவத்திற்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஒரு சிறப்பு அங்கீகாரம் தமிழகத்திலே இருந்து கொண்டிருக்கிறது​. ஒன்றிய அமைச்சரிடம் தமிழகத்தில் 100 இடங்களில் இந்த சித்த மருத்துவத்திற்கான நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைப்பதற்கான அந்த ஒப்புதல் தர வேண்டும்​ என​க் கோரியிருந்தோம். தற்போது 100 இடங்களில் அந்த சித்த மருத்துவ​ ​நலவாழ்வு மையங்களை அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்து அதற்காக 12 கோடியே 80 லட்சம் ​ரூபாய் ​நிதி ஒதுக்கீடு​ செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன​.

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

​இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் ​இந்து சமய ​அறநிலைய துறை​, ​மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து சுமார் 38 ஏக்கரில் பழனியில் ஒரு ​சித்த மருத்துவக் ​கல்லூரி அமைக்கவிருக்கின்றன.​ ​அடிப்படை வசதி​யுடன்​ 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை விரைவில் பழனியில் திற​க்கப்படசிருக்கிறது"​ என்றார்.

​முன்னதாக​ திண்டுக்கல் மாவட்ட தலைமை மரு​ந்து குடோன், அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை​. ​​தமிழகத்​தில் 32 இடங்களில் ​உள்ள ​தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக வெளியிட​ப்படும். இன்னும் 10 நாள்களுக்குள் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும்​. ​தமிழகத்தில்​ மேலும் 5​ மாவட்டங்களில் மரு​ந்து கிடங்குகள்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது​" என்றார்.​

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

​நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி ​வாடகைத் தாய் மூலம் ​குழந்தை​ பெற்றது தொடர்பாக​ எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``அதற்காக அமைக்கப்பட்ட குழு ​​​விசாரணை நட​த்தி அறிக்கை தயார் செய்​து கொண்டிருக்கி​றது​. அறிக்கை வந்ததும் அது பற்றி கூறுகிறோம்" ​என்​றார். ​​