Published:Updated:

`மூன்றாம் அலைக்கு தயாராகவே இருக்கிறோம்!' - Task Force தலைவர் பூர்ணலிங்கம்

கொரோனா சிகிச்சை பிரிவு
News
கொரோனா சிகிச்சை பிரிவு

தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு நிலவரங்களைக் கையாள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் பல துறை நிபுணர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கொண்ட Task Force செயல்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் அலை குறித்த விவாதம் கிளம்பியிருக்கும் நிலையில் அவரிடம் பேசினோம்.

ஒமைக்ரான் வைரஸின் வரவுக்குப் பிறகு, இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுமா, வந்தால் எப்போது வரும் என்ற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரிகரித்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் மூன்றாம் அலை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பூர்ணலிங்கம்
பூர்ணலிங்கம்

தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு நிலவரங்களைக் கையாள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் பல துறை நிபுணர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கொண்ட Task Force செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஹெச்.ஐ.வி தாக்கம் அதிகரித்த நேரத்தில் சுகாதாரத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம். அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக HIV நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட உத்திகள் `தமிழ்நாடு மாடல்' என்ற பெயரில் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டன. 1994-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலராக இருந்தபோது அவர் எடுத்த செயல்பாடுகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டபோதே, இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல் மட்டுமன்றி அடுத்தடுத்து கோவிட்-19 அலைகள் வந்தால் அவற்றைக் கையாளவும், எதிர்காலத்தில் இதுபோன்று பெருந்தொற்றுகள் வந்தால் கையாளவும், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் பரிந்துரைகளைத் தயார்செய்து அளிப்பதே இந்தக் குழுவின் நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

தற்போது மூன்றாம் அலை குறித்த விவாதம் கிளம்பியிருக்கும் நிலையில் அவரிடம் பேசினோம்.

``உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸின் தன்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் உட்பட யாருக்கும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், அது மிகவேகமாகப் பரவுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. லண்டனில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முன்பாக வந்த அலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் ஒமைக்ரானால் பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் இதுவரை சுமார் 150 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டபோது, மூன்று, நான்கு மாதங்களில் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. அதைப் பார்க்கும்போது இந்தியாவிலும் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நிலையைக்கொண்டு இந்தியாவுக்கு மூன்றாம் அலை ஏற்படுமா, எப்போது வரும் என்பதெல்லாம் குறித்த திட்டவட்டமான கணிப்புகள் இதுவரை செய்யமுடியவில்லை. அது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

Vaccination (Representational Image)
Vaccination (Representational Image)

இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மூன்றாம் அலை ஏற்படும் பட்சத்தில் ஒரு நாளைக்கு 20,000 பேரைக் கையாளும் அளவுக்கு மருத்துவமனைகளில், மருந்துகள், கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று டாஸ்க் ஃபோர்ஸ் பரிந்துரை அளித்தது. அதன் அடிப்படையில் இரண்டு, மூன்று மாதங்களாகவே தயாரிப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, கூடுதலாக 20,000 பேரைக் கையாளும் அளவுக்கும் கட்டமைப்பு வசதிகளைத் தயார்நிலையில் வைக்கும்படியும் இப்போது பரிந்துரைத்துள்ளோம். இதுதவிர, விமான நிலையங்களில் அனைத்து சர்வதேச பயணிகளையும் முழுவதுமாக மருத்துவப் பரிசோதனையில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளோம்.

மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற பழக்கங்கள் குறைந்துவிட்டன. இதையும் கருத்தில்கொண்டு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்தும்படியும் தெரிவித்துள்ளோம். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கும் என பிற நாடுகளின் அனுபவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆபத்தான பட்டியலில் இருப்பவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மாநில அரசுக்குப் பரிந்துரை கொடுத்துள்ளோம்.

Covid (Representational Image)
Covid (Representational Image)
AP Illustration/Peter Hamlin

மூன்றாம் அலை வராது என்று அலட்சியமாக இல்லாமல், வந்தால் சமாளிக்கக்கூடிய வகையில் அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சுணக்கம் காட்டக்கூடாது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். மத்திய அரசு பூஸ்டர் டோஸுக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் அதையும் செலுத்திக்கொள்ள வேண்டும். மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றைத் தீவிரமாகப் பின்பற்றினால் பாதிப்பைத் தவிர்க்க முடியும்" என்றார்.