Published:Updated:

கேள்விக்குறியான `அம்மா மினி கிளினிக்' மருத்துவர்கள் எதிர்காலம்; சர்ச்சைக்கு அமைச்சரின் பதில் என்ன?

Amma mini clinic ( Photo: Vikatan )

`அம்மா மினி கிளினிக் பணியாளர்களை உடனடியாகப் பணியிலிருந்து விடுவியுங்கள்' என்று சில தினங்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட, அது பெரும் சர்ச்சையானது.

கேள்விக்குறியான `அம்மா மினி கிளினிக்' மருத்துவர்கள் எதிர்காலம்; சர்ச்சைக்கு அமைச்சரின் பதில் என்ன?

`அம்மா மினி கிளினிக் பணியாளர்களை உடனடியாகப் பணியிலிருந்து விடுவியுங்கள்' என்று சில தினங்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட, அது பெரும் சர்ச்சையானது.

Published:Updated:
Amma mini clinic ( Photo: Vikatan )

கடந்த ஆட்சியில் `அம்மா மினி கிளினிக்' திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவரும் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் கடந்த சில தினங்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Amma mini clinic
Amma mini clinic
Photo: Vikatan

`அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை' என்ற நோக்கத்துடன் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக் காலத்தில் தொடங்கப்பட்டது `அம்மா மினி கிளினிக்' திட்டம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், `மக்களைத் தேடி மருத்துவம்', `வரும் முன் காப்போம்' என்ற பெயர்களில் புதிய மருத்துவத் திட்டங்களைத் தொடங்கியதுடன், `அம்மா மினி கிளினிக் திட்டத்தால் பயனில்லை. இது சரியான திட்டமிடுதல் இல்லாமலும் முறையான கட்டமைப்பு இல்லாமலும் செயல்படுத்தப்பட்ட ஒரு வருடத்துக்கான தற்காலிகத் திட்டம்தான்" என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்குகளையும் மூடவும் உத்தரவிட்டது. அதேசமயம், `அம்மா மினி கிளினிக் திட்டம்' கைவிடப்பட்டாலும் அந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாற்றுப் பணியிடம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும், தங்களுக்கு மாற்றுப் பணியிடம் கிடைத்துவிடும் என்று நிம்மதியடைந்தார்கள். அதுமட்டுமல்லாது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் அவர்களுக்கான ஒப்பந்தக் காலம் முடிவடைந்த நிலையில், அதை 2022 மார்ச் மாதம் வரை நீட்டித்தது தி.மு.க அரசு. மார்ச் மாதத்துக்குப் பிறகு, தங்களுக்கு மாற்றுப் பணியிடம் வழங்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த சூழலில்தான், `அம்மா மினி கிளினிக் பணியாளர்களை உடனடியாகப் பணியிலிருந்து விடுவியுங்கள்' என்று சில தினங்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட, அது பெரும் சர்ச்சையானது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில், ``தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த 1,820 மருத்துவர்களும், சுமார் 2,000 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு மாறாக மருத்துவர்களும், பிற பணியாளர்களும் நீக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்றது. அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு ரூ.60,000-மும், பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.6,000-மும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தமிழக அரசே இதைச் செய்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கூறினாலும் இதை அரசால் நியாயப்படுத்த முடியாது. அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த தமிழக அரசு முன் வர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர்களை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளனர். ஆனால், தெளிவான ஒரு விளக்கத்தை அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லவில்லை என்று கதறுகின்றனர் அவர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்..
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்..

இதுகுறித்து கடலூர் மாவட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவரான ஹரியிடம் பேசினோம், ``அம்மா மினி கிளினிக் திட்டத்தின் கீழ் எங்களை பணிக்கு எடுக்கும்போது ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில்தான் எடுத்தார்கள். அம்மா மினி கிளினிக்கின் செயல்பாட்டைப் பொறுத்து இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், எங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும் கூறினார்கள். நாங்களும் நம்பிக்கையோடு பணியாற்றினோம். ஆனால், ஆட்சி மாறியதும் இந்தத் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள். இதில் ஆறுதல் என்னவென்றால், எங்களது ஒப்பந்தத்தை மார்ச் மாதம் வரை நீட்டித்து தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தியதுதான். அமைச்சர் அளித்திருந்த வாக்குறுதியின்படி எங்களுக்கு மார்ச் மாதத்துக்குப் பிறகு, மாற்றுப் பணி வழங்கப்படும் என்று காத்திருந்தோம்.

ஆனால், ஜனவரி 28-ம் தேதி, அம்மா மினி கிளினிக் ஊழியர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில், அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்' என்ற அறிவிப்பை மண்டல மருத்துவ அலுவலர் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் நாங்கள் கடுமையான அதிர்ச்சியடைந்தோம். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதத்துக்கான ஊதியமும் வழங்கப்படாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துதான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். போராட்டம் செய்தியாகி சர்ச்சையானதும் எங்களை மீண்டும் பணிக்கு வரச் சொல்லிவிட்டார்கள்.

இப்போதுவரை எங்களது அடுத்தகட்டம் என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு வருட காலத்தில் நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். நாங்கள் கேட்பதெல்லாம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ எங்களை பணியமர்த்துங்கள் என்பதுதான். ஆனால், அரசாங்கம் இதுகுறித்த தெளிவான தகவல்களை வெளியிடாமல் மெளனமாக இருப்பது எங்களைப் பதற்றமடையச் செய்கிறது. மார்ச் 31-ம் தேதியுடன் எல்லோருக்குமான ஒப்பந்தம் முடிவடைகிறது. அதுவரை காத்திருக்காமல் எங்களுக்கு மாற்றுப் பணியிடங்களை வழங்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம், ``அந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 1,820 மருத்துவர்களையும் மார்ச் 31-ம் தேதி வரை எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு, அவர்களை எந்த வகையில் பணிக்கு அமர்த்தலாம் என்பதற்கான சட்ட ரீதியான விஷயங்களையும் ஆராய்ந்து வருகிறோம். ஏனெனில், அவர்கள் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்தான். அவர்களை பணியில் அமர்த்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து வேறொரு திட்டத்தில் நிச்சயம் அவர்களுக்கான மாற்றுப் பணி வழங்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism