Published:Updated:

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... தடுப்பூசிப் பணிகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம்!

மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 என்ற அளவில் பதிவாகியிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக அதிகரித்ததையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம்.

இந்திய அளவில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாள் ஒன்றுக்கு 2,000-க்கு மேல் பதிவாகி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்விதமாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் ஏற்கெனவே டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து கடிதம் எழுதியிருந்தார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை

இந்த நிலையில், தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 25 என்று அளவில் பதிவாகியிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக அதிகரித்ததையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா கட்டுப்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறவில்லை. மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism