Published:Updated:

`மருத்துவக் கல்லூரிகளின் பெருக்கம் ஆபத்து!' - எச்சரிக்கை மணியடிக்கும் மருத்துவக் கவுன்சில்

கல்லூரிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மருத்துவக் கவுன்சில் சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

 நீட்
நீட்

தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதே நோக்கமாக மத்திய அரசு கடந்த மூன்றாண்டு காலமாக இந்தியா முழுவதும் நீட் தகுதித் தேர்வை நடத்துகிறது. உலகச் சுகாதார நிறுவனம் 1,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்கிற விகிதாசார அளவை நிர்ணயித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 709 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்கிற அதீத அடிப்படையிலேயே மருத்துவத்துறை இயங்கிவருகிறது.

`மருத்துவக் கல்லூரி கமிட்டியை விசாரிக்காதது ஏன்?' - நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நீதிபதி கேள்வி

இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பெருக்கம் ஆரோக்கியமற்ற முறையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதனால், கல்லூரிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மருத்துவக் கவுன்சில், தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தின் ஒரு பகுதியில், ``தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் இதுவரை பதிவு செய்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம். இவர்களில் தற்போது பணியில் இல்லாதவர்கள் தவிர்த்து மொத்தம் 1.15 லட்சம் பேர் தமிழகத்தில் மருத்துவர்களாகப் பணியில் இருக்கிறார்கள். தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுகளை அதிகரிக்கும் நிலையில் 2035-ம் ஆண்டில் மொத்தம் 2.02 லட்சம் மருத்துவர்கள் இருப்பார்கள்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்
தற்போது பயிலும் மாணவர்களைக் கிராமப்புற சுகாதார மையங்களில் பயிற்சிக்கு அனுப்புவதன் வழியாக நியாயமான வகையில் மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அது ஆரோக்கியமற்ற எண்ணிக்கை. தற்போது தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 8 கோடி. வரும் ஆண்டுகளில் அது 2.02 லட்சம் மருத்துவர்கள் தேவை ஏற்படும் அளவுக்கு அதிகரித்திருக்காது. அதனால், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும். தற்போது பயிலும் மாணவர்களைக் கிராமப்புற சுகாதார மையங்களில் பயிற்சிக்கு அனுப்புவதன் வழியாக நியாயமான வகையில் மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.

`நிலவேம்புக் குடிநீரை அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டாம்' - மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

இதற்கு விளக்கமளித்துள்ள பீலா ராஜேஷ், ``நீட் போன்ற தகுதித் தேர்வுகள் தமிழ்நாட்டிலிருந்து தமிழகத்துக்கான மருத்துவர்கள் உருவாகும் சூழலைக் குறைத்துள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான கல்லூரிகள் மட்டுமே அதற்கான வாய்ப்பை ஓரளவுக்குத் தக்கவைக்கும். மேலும், நார்வே போன்ற நாடுகளில் 1,000 நபர்களுக்கு 4 மருத்துவர்கள் வீதம் செயல்பட்டு வருகின்றனர். அந்த எண்ணிக்கை எந்த வகையிலும் ஆரோக்கியமற்றதல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.