Published:Updated:

ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி உயிரிழப்பு; விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பழுதடைந்து கதவு திறக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்புலன்ஸில் சிக்கியதால் கோயாமோன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி உயிரிழப்பு; விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பழுதடைந்து கதவு திறக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்புலன்ஸில் சிக்கியதால் கோயாமோன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
ஆம்புலன்ஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு கருவன் துருத்து பகுதியை சேர்ந்தவர் கோயாமோன் (60). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வேலைமுடிந்து சாலையில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள பீச் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். கோயாமோனுடன் அவரின் நண்பர்கள் இருவரும், ஒரு மருத்துவரும் சென்றார்கள். ஆம்புலன்ஸ் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியை அடைந்ததும் டிரைவர் வெளியே இறங்கி கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு திறக்கவில்லை. உள்ளே இருந்தவர்கள் திறக்க முயன்றும் முடியவில்லை.

ஆம்புலன்ஸ் கதவு உடைக்கப்பட்டு மீட்கப்பட்ட நோயாளி
ஆம்புலன்ஸ் கதவு உடைக்கப்பட்டு மீட்கப்பட்ட நோயாளி

இதையடுத்து இரும்புக் கம்பி மூலம் கதவை திறக்க முயற்சித்தார்கள். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இதற்கிடையே அங்கு மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் திரண்டனர். நோயாளி உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில், திறக்காமல் இருந்த ஆம்புலன்ஸ் கதவை உடைத்து ஆபத்தான நிலையில் இருந்த கோயாமோனை மீட்க முடிவு செய்தனர். இதையடுத்து கோடாரி மூலம் கதவு உடைத்து, திறக்கப்பட்டது. கோயாமோனை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸுக்குள் கோயாமோன் சிக்கியிருந்ததால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் உள்ளே சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பழுதடைந்து கதவு திறக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸில் சிக்கியதால் கோயாமோன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மெடிக்கல் காலேஜ் சூப்பிரன்டண்டன்ட்க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இறந்த கோயா மோன்
இறந்த கோயா மோன்

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களின் தகுதியை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோழிக்கோடு ஆம்புலன்ஸ் கதவு திறக்காத சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோழிக்கோடு ஆர்.டி.ஓ-வுக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் பைஜூ நாத் உத்தரவிட்டுள்ளார்.