Election bannerElection banner
Published:Updated:

பிரிட்டனிலிருந்து நீலகிரி திரும்பிய இருவருக்கு கொரோனா! - புனே அனுப்பப்பட்ட மாதிரிகள்

கொரோனா
கொரோனா

பிரிட்டனிலிருந்து நீலகிரி திரும்பிய 14 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், எந்த வகை கொரோனா என்பதை அறிய புனேவுக்கு ஆய்வு மாதிரிகளை அனுப்பியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பல்வேறு கட்டங்களில் அமல்படுத்தப்பட்ட கடுமையான பொது முடக்கத்திலிருந்து தற்போதுதான் மக்களுக்கு மெள்ளத் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

ஊட்டி
ஊட்டி

இந்தநிலையில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு நம்மை மேலும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. பிரிட்டனிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்பவர்களை அந்தந்த நாடுகள் தீவிர மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றன.

பிரிட்டனிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குக் கடந்த வாரம் 14 பேர் திரும்பினர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்களில், இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஊட்டி
ஊட்டி

இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில், பாதிக்கப்பட்ட ஒருவரின் தாயாருக்கும் தொற்று உறுதி ஆகியிருக்கிறது. இந்த மூவரையும் ஊட்டியிலுள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகின்றனர்.

7 புதிய அறிகுறிகள், 70% வேகம்... புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை! #FAQ

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,``லண்டனிலிருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்த 14 பேரைத் தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மூவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், மூவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு புனோவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

மேலும், 14 பேரின் உறவினர்களில் 35 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஆப்பிரிக்கா மற்றும் வேறு நாடுகளிலிருந்து ஊட்டிக்கு வந்திருக்கும் 109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய உறவினர்கள் 84 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு