Published:Updated:

ஸ்பெயினிலிருந்து திரும்பிய மருத்துவர்.. மத்திய அமைச்சர் தன்னைத் தானே தனிமைப்படுத்திய பின்னணி!

மத்திய அமைச்சர் முரளிதரன்
மத்திய அமைச்சர் முரளிதரன்

கொரோனா அச்சம் காரணமாக மத்திய அமைச்சர் ஒருவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

கேரளத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24-ஐ தொட்டுள்ளது. மேலும் கண்காணிப்பில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மத்திய அமைச்சர் ஒருவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருக்கும் கேரளத்தைச் சேர்ந்த வி.முரளிதரன்தான் அவர். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஸ்பெயினில் தனது ட்ரெயினிங்கை முடித்துக்கொண்டு இந்த மாதம் ஒன்றாம் தேதிதான் கேரளா திரும்பியுள்ளார்.

ஸ்ரீ சித்ரா மருத்துவமனை
ஸ்ரீ சித்ரா மருத்துவமனை

ஆனால், ஸ்பெயின் சென்ற விவகாரத்தை அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருந்த நிலையில், மார்ச் 2 முதல் 5 வரை டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்ஷன் ஆஞ்சியோகிராபி ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அவர் நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டாலும், மார்ச் 8 ஆம் தேதிதான் அவர் தனது பயண வரலாற்றை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அறிக்கை அளித்தார். தொண்டை வலி ஏற்படவே அதைச் சொல்லியுள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா.. பொதுநிகழ்ச்சியில் குத்தாட்டம்! - சர்ச்சையில் சிக்கிய கோவை அதிகாரி

இருப்பினும், அவர் பயணம் செய்த ஸ்பெயின் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இல்லை என்பதால், அவர் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறப்படவில்லை. இதனால் அடுத்த இரண்டு நாள்கள் வெளிநோயாளர் பிரிவில் வேலைபார்த்துவந்துள்ளார். பின்னர் மார்ச் 12 ஆம் தேதி வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இதன்பின் 14ம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும், மருத்துவமனையில் அவருடன் பணியாற்றிய 25 மருத்துவர்களையும் கேரள அரசு தனிமைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் முரளிதரன் 14ம் தேதி சென்றார். ஆய்வுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். அவர் சென்று திரும்பிய பிறகுதான் மருத்துவருக்குக் கொரோனா தொற்று இருப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.

முரளிதரன்
முரளிதரன்

இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் தனக்குக் கொரோனா தொற்று வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார் அமைச்சர் முரளிதரன். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் அங்கு செல்வதையும் தவிர்த்து இரண்டு நாள்களாகத் தனது டெல்லி வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும் வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தனிமைப்படுத்தலில் தனக்குக் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பின் அவர் மீண்டும் அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`சார்ஸ்'  தந்த மூன்று பாடங்களும், தொழில் - வேலையில் கொரோனா நிகழ்த்திய மாற்றமும்!
அடுத்த கட்டுரைக்கு