Published:Updated:

`பன்றிக்காய்ச்சல் ஒரு நோயே அல்ல!' - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
News
யோகி ஆதித்யநாத்

பன்றிக்காய்ச்சல் தொற்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெகுவாகப் பரவி வருகிறது. இதுவரை அங்கு ஒன்பது பேர் இந்நோய்த் தொற்றால் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே உலுக்கிப் பல உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் ஹெச்.1.என்.1.(H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வெகுவாகப் பரவிவருகிறது.

பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்

கடந்த ஜனவரியில், இந்தியாவில் பரவத்தொடங்கிய பன்றிக்காய்ச்சல், பிப்ரவரி 16 வரையிலான கணக்குப்படி இதுவரை 884 பேரை பாதித்துள்ளது. இடைப்பட்ட ஒன்றரை மாத காலத்தில், பன்றிக்காய்ச்சலால் 14 பேர் இறந்துள்ளதாக நம் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த பன்றிக்காய்ச்சல் தொற்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெகுவாகப் பரவிவருகிறது. இதுவரை அங்கு ஒன்பது பேர் இந்நோய்த் தொற்றால் இறந்துள்ளனர். இதில் ஆறு பேர், மீரட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பகுதியில் 17 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது மருத்துவ ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற ஒரு மருத்துவ முகாமில் பன்றிக்காய்ச்சல் குறித்துப் பேசியுள்ளார். லக்னோவின் ஔரங்காபாத்தில், ஐந்தாவது முக்கிய மந்திரிகள் ஆரோக்கிய மேளா நடைபெற்றது. இதில், ஜப்பானிய என்செஃபாலிடிஸ் (Japanese encephalitis) மற்றும் அக்யூட் என்செஃபாலிடிஸ் (Acute encephalitis) போன்ற மூளைக்காய்ச்சல்கள் வருவதைத் தடுப்பதற்குப் போடப்படும் தடுப்பூசி முகாமைத் திறந்துவைத்தார் யோகி ஆதித்யநாத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மருத்துவ முகாமில், அவர் பன்றிக்காய்ச்சல் தொற்று குறித்துப் பேசியபோது,``உத்தரப்பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரமாகப் பரவி வருவதைக் காண முடிகிறது. இந்தக் காய்ச்சல் எல்லாம் ஒரு நோயே அல்ல. வானிலை மாறும்போது, சிலருக்கு சளி பிடிக்கும். அது சிலருக்குக் காய்ச்சலாக மாறும். இது எதனால் ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் அதை பன்றிக்காய்ச்சல் அல்லது பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறோம்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

எனவே, யாரும் பன்றிக்காய்ச்சலை நினைத்து பீதியடைய வேண்டாம். இதற்காக, சுகாதாரத்துறை ஒரு சிறந்த செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் முன்கூட்டியே சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட வேண்டும். இதனால் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும்" என்றார்.