Published:Updated:

உயிருக்குப் போராடும் தந்தை... கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்!

கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்

சிறுவனின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மேலும் அவரின் உயிரைக்காப்பற்ற வேண்டுமெனில் உறுப்பு தானம் செய்வதே ஒரே வழி.

உயிருக்குப் போராடும் தந்தை... கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்!

சிறுவனின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மேலும் அவரின் உயிரைக்காப்பற்ற வேண்டுமெனில் உறுப்பு தானம் செய்வதே ஒரே வழி.

Published:Updated:
கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன், நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் தன்னுடைய தந்தைக்கு, கல்லீரலை உறுப்பு தானம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக அந்த சிறுவன் வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்திருக்கிறார். மேலும் இதற்கு முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று, நோய்வாய்ப்பட்ட நபருக்கு கல்லீரலை தானம் செய்ய அவரின் மகனை அனுமதிக்க வேண்டி, உத்தரப்பிரதேச சுகாதார செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், கல்லீரல் தானம் செய்ய விரும்பும் சிறுவன் மைனர் என்ற காரணத்தினாலே, உறுப்பு தானம் செய்யமுடியுமா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.

hospitals
hospitals

இந்த நிலையில் அந்த சிறுவன் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஆர். பட் மற்றும் பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ``சிறுவனின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உயிரைக்காப்பற்ற வேண்டுமெனில் உறுப்பு தானம் செய்வதே ஒரே வழி" என்று தெரிவித்தார்.

அதையடுத்து உத்தரப்பிரதேச அரசிடம் பதில் கேட்டு நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில், ``மனுதாரர் தன்னுடைய நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு கல்லீரலை தானம் செய்யத் தயாராக மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், சட்டத்தின் அடிப்படையில், உறுப்பு தானம் செய்ப்பவர் பெரியவராக இருக்க வேண்டும். இருப்பினும் இந்த மனு செப்டம்பர் 8-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எனவே அவசரத்தைக் கருத்தில் கொண்டு, வரும் 12-ம் தேதி இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளும்போது, உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான சுகாதாரத் துறையின் பொறுப்பான அதிகாரியொருவர் உடனிருக்கவேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் இதற்கிடையில் மனுதாரரால், உறுப்பு தானம் செய்வது சாத்தியமா என்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்திருக்கிறது.